ரிஸ்க் எடுக்க தயங்கக் கூடாது - சமந்தா சொல்லும் வாழ்க்கை தத்துவம்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, ரிஸ்க் எடுப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசி இருக்கிறார். அதைப் பற்றி பார்க்கலாம்.

Samantha Ruth Prabhu Says About Taking Risks : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு, தனது நடிப்புத் திறமையாலும், தனித்துவமான ஆளுமையாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். சமீபத்தில், வாழ்க்கையில் மாற்றங்களையும், வெற்றியையும் அடைய ரிஸ்க் எடுப்பதன் அவசியத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். "ரிஸ்க் எடுக்காம எந்த ஒரு மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது" என்று அவர் கூறியிருக்கிறார். வாழ்க்கையிலும், தொழிலிலும் முன்னேறணும்னா கம்ஃபோர்ட் ஜோன்ல இருக்கக் கூடாதுன்னு சமந்தா கூறியுள்ளார். புதுசா எதையாவது முயற்சி பண்ணனும், பயத்தை விட்டுட்டு தைரியமா சவால்களை எதிர்கொள்ளனும் என சமந்தா தெரிவித்துள்ளார்.
சமந்தா
ரிஸ்க் எடுக்க சொல்லும் சமந்தா
மேலும் எந்த ஒரு பெரிய சாதனையையும் அடையுறதுக்குப் பின்னாடி ஏதோ ஒரு விதத்துல ரிஸ்க் இருக்கும் என அவர் கூறியுள்ளார். சமந்தா தன்னோட தொழில் வாழ்க்கையில இந்தக் கொள்கையைப் பின்பற்றி வந்திருக்கிறார். சாதாரண கதாநாயகி கேரக்டர் ரோல்களில் மட்டும் நடிக்காமல், 'தி ஃபேமிலி மேன் 2' வெப் சீரிஸில் 'ராஜி' கேரக்டர், 'ஓ பேபி', 'யசோதா', 'சகுந்தலம்' னு வித்தியாசமான கதைகளில் நடிச்சு, தன்னோட நடிப்புத் திறமையை நிரூபிச்சிருக்கிறார். இது மாதிரி கேரக்டர்கள்ல நடிக்கிறது ஒரு விதத்துல ரிஸ்க் தான்.
நடிகை சமந்தா
சமந்தாவின் தைரியம்
ஆனா, சமந்தா அதை சக்சஸ்ஃபுல்லா பண்ணியிருக்கிறார். கடந்த ஆண்டு, மயோசிடிஸ் என சொல்லப்பம் ஒரு ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு, நடிப்புக்கு கொஞ்ச நாள் பிரேக் விட்டிருந்தார் சமந்தா. இது அவங்ரோட தொழில் வாழ்க்கையில ஒரு பெரிய சவாலா இருந்துச்சாம். ஆனா, அந்தக் கஷ்டமான சூழ்நிலையிலயும் தைரியமா இருந்து, மீண்டு வந்து, இப்போ மறுபடியும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இது அவர் அவருடைய வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்துள்ளதற்கு ஒரு உதாரணம்.
சமந்தா பேட்டி
ரோல் மாடலாக மாறிய சமந்தா
சமந்தா கடைசியாக பாலிவுட் நடிகர் வருண் தவானோடு 'சிட்டாடல்: ஹனி பன்னி' என்கிற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த ஆக்ஷன்-த்ரில்லர் சீரிஸ் சர்வதேச அளவில் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்த சீரிஸில் சமந்தா வித்தியாசமான ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். மொத்தத்துல, சமந்தா ரூத் பிரபுவோட பேச்சு, வாழ்க்கையில முன்னேறணும்னு நினைக்கிற எல்லாருக்குமே ஒரு உத்வேகத்தைக் கொடுக்குது. கஷ்டங்கள் வரும்போது பயப்படாம, தைரியமா எதிர்கொள்ளணும், தேவைப்படும்போது ரிஸ்க் எடுக்கத் தயாரா இருக்கணும்னு அவங்க பேச்சும், வாழ்க்கைப் பயணமும் சொல்லுது. இதனாலதான் அவர் இன்றைக்கும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக நிலைத்திருக்கிறார்.