- Home
- Cinema
- ஆளவிடுங்கடா சாமி... ஐட்டம் சாங்கிற்கு ஆட அழைத்த புஷ்பா 2 படக்குழு... நோ சொல்லி திருப்பி அனுப்பிய சமந்தா?
ஆளவிடுங்கடா சாமி... ஐட்டம் சாங்கிற்கு ஆட அழைத்த புஷ்பா 2 படக்குழு... நோ சொல்லி திருப்பி அனுப்பிய சமந்தா?
அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 திரைப்படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கிற்கு நடிகை சமந்தா கவர்ச்சி நடனம் ஆட மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் புஷ்பா. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீசான இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். சுகுமார் இயக்கத்தில் வெளியான இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருந்தது. இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்திருந்தார்.
பான் இந்தியா படமாக ரிலீசான புஷ்பா திரைப்படம் அனைத்து மொழிகளிலும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலையும் வாரிக்குவித்து இருந்தது. புஷ்பா படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு அப்படத்தின் பாடல்களும் முக்கிய பங்காற்றி இருந்தன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்த அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்ததோடு, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களிலும் செம்ம வைரல் ஆனது.
இதையும் படியுங்கள்... 'ராஜா ராணி 2' சீரியலில் புது சந்தியாவாக களமிறங்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகை யார் தெரியுமா?
அதிலும் குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா... ஊ ஊ சொல்றியா என்கிற ஐட்டம் பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடி இருந்ததும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்தது. சமந்தாவின் ஆட்டத்தை பார்ப்பதற்காகவே படத்திற்கு போனவர்கள் ஏராளம். அந்த அளவுக்கு அப்பாடலில் கவர்ச்சி பொங்க நடனம் ஆடி இருந்தார் சமந்தா. இந்த 3 நிமிட பாடலுக்கு நடனம் ஆட நடிகை சமந்தாவிற்கு ரூ.5 கோடி வரை சம்பளமாக வழங்கப்பட்டு இருந்தது.
புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் 2-ம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல்பாகத்தை விட பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்திலும் ஐட்டம் பாடல் ஒன்று இடம்பெற உள்ளதாம். முதல் பாகத்தில் ஆடிய நடிகை சமந்தாவையே இரண்டாம் பாகத்திலும் ஆட வைக்க பேச்சுவார்த்தை மேற்கொண்டார்களாம். ஆனால் அதற்கு நடிகை சமந்தா முடியவே முடியாது என மறுத்துவிட்டாராம். எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க முடியாது எனக் கூறி சமந்தா மறுத்திவிட்டதால், வேறு முன்னணி நடிகைகளை ஆட வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
இதையும் படியுங்கள்... ‘ஏகே 62’ அப்டேட்டிற்காக ஆவலோடு காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லைகா நிறுவனம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.