MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • ‘ஏகே 62’ அப்டேட்டிற்காக ஆவலோடு காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லைகா நிறுவனம்

‘ஏகே 62’ அப்டேட்டிற்காக ஆவலோடு காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லைகா நிறுவனம்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தின் அப்டேட் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு லைகா நிறுவனம் ஷாக் கொடுத்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 16 2023, 12:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் ஏகே 62. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். ஆனால் அண்மையில் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அவர் ஒப்பந்தமான தகவலையும் இன்னும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால் ஏகே 62 படத்தின் அறிவிப்பு எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இந்த நிலையில், நேற்று மாலை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது லைகா நிறுவனம். அதன்படி இன்று தாங்கள் தயாரிக்க உள்ள 24-வது படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்யப்படும் என குறிப்பிட்டு இருந்தனர். அது எந்த படம் என்பதை அவர்கள் குறிப்பிடாமல் இருந்ததால், நிச்சயம் அது அஜித்தின் ஏகே 62 பர்ஸ்ட் லுக் ஆக தான் இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இதையும் படியுங்கள்...மாஸ்டர் பிளாஸ்டரை சந்தித்த ரோலெக்ஸ்... இணையத்தை கலக்கும் ‘சூர்யா - சச்சின்’ லேட்டஸ்ட் கிளிக்

34

அதன்படி இன்று காலை லைகா நிறுவனம் தங்களின் 24-வது படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது. இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஏகே 62 படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் தாங்கள் தயாரித்துள்ள சிறு பட்ஜெட் படமான ‘திருவின் குரல்’ என்கிற படத்தின் பர்ஸ்ட் லுக்கை தான் தற்போது வெளியிட்டு உள்ளார். இதைப்பார்த்து அப்செட் ஆன அஜித் ரசிகர்கள் ஏகே 62 அப்டேட்டை வெளியிடுமாறு குரல் கொடுத்து வருகின்றனர். 

44

திருவின் குரல் திரைப்படத்தில் அருள்நிதி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மீசைய முறுக்கு படத்தின் நாயகி ஆத்மிகா நடித்திருக்கிறார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தை ஹரீஷ் பிரபு இயக்கி உள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு கணேஷ் சிவா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இவர் அயலி, விலங்கு போன்ற வெப் தொடர்களுக்கு படத்தொகுப்பு செய்தவர் ஆவார்.

இதையும் படியுங்கள்...லோகேஷ் கனகராஜை தட்டிதூக்க பிளான் போடும் ரஜினிகாந்த்..! சூப்பர்ஸ்டாரின் மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved