மாஸ்டர் பிளாஸ்டரை சந்தித்த ரோலெக்ஸ்... இணையத்தை கலக்கும் ‘சூர்யா - சச்சின்’ லேட்டஸ்ட் கிளிக்
நடிகர் சூர்யா மும்பையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சந்தித்து, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அவரது நடிப்பில் தற்போது சூர்யா 42 திரைப்படம் தயாராகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகர் சூர்யா பல்வேறு கெட் அப்களில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுதவிர வெற்றிமாறனின் வாடிவாசல், சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம், டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் என சூர்யாவின் லைன் அப் நீண்டுகொண்டே செல்கிறது. நடிகர் சூர்யா தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு தான் இவரது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகள் தியா மற்றும் தேவ் ஆகியோரும் உள்ளனர். சமீபத்தில் கூட புதிதாக வாங்கி உள்ள செல்ல நாய்க்குட்டியின் வீடியோவை வெளியிட்டு இருந்தார் ஜோதிகா.
இதையும் படியுங்கள்... லோகேஷ் கனகராஜை தட்டிதூக்க பிளான் போடும் ரஜினிகாந்த்..! சூப்பர்ஸ்டாரின் மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?
இந்நிலையில், நடிகர் சூர்யா மும்பையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார். அவருடனான சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சூர்யா, அன்பும் மரியாதையும் என கேப்ஷன் கொடுத்துள்ளார். சூர்யா - சச்சின் சந்திப்பை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் இந்த அப்டேட் நம்ம லிஸ்ட்லயே இல்லையே என கமெண்ட் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் எதற்காக சந்தித்து கொண்டார்கள் என்கிற விவரம் வெளியாகவில்லை.
குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆல் ரவுண்டர் நடிகர் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகர் ஆவார். பல்வேறு பேட்டிகளில் அவரே இதனை வெளிப்படையாக கூறி இருக்கிறார். இப்படி கிரிக்கெட் வீரருக்கே பேவரைட் ஹீரோவாக இருக்கும் சூர்யா தற்போது சச்சினை சந்தித்துள்ள புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கில் உள்ளது.
இதையும் படியுங்கள்... மருதநாயகம் கமல் கெட்-அப்பில் மாஸ் ஆக எண்ட்ரி கொடுத்த தனுஷ்... டிரெண்டாகும் வாத்தி நாயகனின் போட்டோஸ்