ரூ.1000 கோடி சம்பளம் கொடுத்தால் தான் தொகுத்து வழங்குவேன்... பிரபலத்தின் கண்டிஷனால் கலங்கிப்போன பிக்பாஸ்
மக்களிடையே மிகவும் பேமஸான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபலம் ஒருவர் ரூ.1000 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம்.
பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, இந்தியாவில் இந்தி மொழியில் தான் முதன் முதலில் நடத்தப்பட்டது. அங்கு இதுவரை 15 சீசன்கள் முடிந்துள்ளன. இவற்றை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி உள்ளார்.
இந்தியில் பிரபலமான இந்நிகழ்ச்சி படிப்படியாக பிற மொழிகளிலும் நடத்தப்பட்டது. அதன்படி தமிழில் கமல்ஹாசனும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், கன்னடத்தில் சுதீப்பும், மலையாளத்தில் மோகன்லாலும் தொகுத்து வழங்கி உள்ளனர். இந்தியைப் போல் பிற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... இரவின் நிழல் படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்?... மனம் திறந்த ‘பவி டீச்சர்’ பிரிகிடா
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16-வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியையும் சல்மான் கான் தான் தொகுத்து வழங்க உள்ளாராம். இதற்காக அவர் ரூ.1050 கோடி சம்பளமாக கேட்டு உள்ளாராம். கடந்த சீசனில் ரூ.350 கோடி சம்பளமாக வாங்கிய சல்மான் கான், தற்போது அதைவிட மூன்று மடங்கு அதிகமாக கேட்டுள்ளது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சற்று கலக்கமடையச் செய்துள்ளது.
கேட்ட சம்பளத்தை கொடுத்தால் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவேன் என்று கறாராக சொல்லிவிட்டாராம் சல்மான் கான். இவர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து பலமுறை விலக முயற்சித்தபோதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரிடம் பேசி சம்மதிக்க வைத்துவிடுகிறார்களாம். சம்பளத்தை தடாலடியாக உயர்த்தினாலாவது இதிலிருந்து விலக்கு கிடைக்கும் என்கிற நோக்கத்தில் தான் அவர் இவ்வாறு செய்துள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... சுஷ்மிதா சென்-ஐ டேட் செய்யும் லலித் மோடி… வைரலாக பரவும் டிவிட்டர் பதிவு!!