MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இரவின் நிழல் படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்?... மனம் திறந்த ‘பவி டீச்சர்’ பிரிகிடா

இரவின் நிழல் படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்?... மனம் திறந்த ‘பவி டீச்சர்’ பிரிகிடா

Iravin Nizhal Brigida : பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி உள்ள இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்தது ஏன் என்பது குறித்து நடிகை பிரிகிடா விளக்கம் அளித்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Jul 15 2022, 07:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சினிமாவில் புதுப்புது முயற்சிகளை செய்து, அதில் வெற்றியும் கண்டவர் பார்த்திபன். இவரின் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் வியக்கத்தக்க படம் தான் இரவின் நிழல். உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இதனை எடுத்துள்ளார் பார்த்திபன். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது.

24

இரவின் நிழல் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார் பிரிகிடா. இவர் ஆஹா கல்யாணம் என்கிற வெப்தொடரில் பவி டீச்சராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற சென்ற பிரிகிடாவிற்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் பார்த்திபன்.

இதையும் படியுங்கள்... IMDB தர வரிசை பட்டியலில் முதல் இடத்தை தட்டி தூக்கிய 'விக்ரம்'... டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட் இதோ..!

34

இப்படத்தில் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்துள்ளார் பிரிகிடா. அவ்வாறு நடித்தது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் கூறியுள்ளார். அதன்படி, படத்தின் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அப்படி ஒரு காட்சி தேவைப்பட்டது. இதைப் பார்த்திபன் சார் என்னிடம் சொன்னபோது, இதை எப்படி பெற்றோரிடம் சொல்லி புரிய வைப்பது என்பது எனக்கு சற்று நெருடலாக இருந்தது.

44

இதையடுத்து நானும், பார்த்திபன் சாரும் எடுத்துக்கூறியதும், எனது பெற்றோர் அவ்வாறு நடிக்க சம்மதித்தனர். அதன்பின்னர் தான் அந்தக் காட்சியை எடுத்து முடித்தோம். படத்தில் பார்க்கும் போது அது கவர்ச்சியாக தெரியாது, பலரையும் அது ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். அதில் உள்ள புனிதம் மட்டுமே தெரியும் என விளக்கம் அளித்துள்ளார் பிரிகிடா.

இதையும் படியுங்கள்... அருள்நிதி நடித்துள்ள தேஜாவு ட்ரைலரை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்!!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் விஜய் - சொத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு; புயலை கிளப்பிய சங்கீதா புதிய மனு தாக்கல்!
Recommended image2
Now Playing
விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
Recommended image3
சொந்தப் பிள்ளைகளையே கவனிக்காத நீங்க..!" - விஜய்யை வம்புக்கு இழுக்கிறாரா பிரசாந்த் ரங்கசாமி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved