சச்சின் டெண்டுல்கரை மிகவும் இம்பிரஸ் பண்ணிய லேட்டஸ்ட் தமிழ் படம் எது தெரியுமா?
ரெட்டிட்டில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தான் சமீபத்தில் பார்த்து ரசித்த தமிழ் படத்தை பற்றி கூறி உள்ளார்.

Sachin Watched 3BHK Movie
ரெட்டிட்டில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தான் சமீபத்தில் பார்த்து ரசித்த படம் எது என்பதை கூறி இருந்தார். அதன்படி சமீபத்தில் 3 பி.ஹெச்.கே படம் பார்த்ததாக கூறி இருக்கிறார். அப்படம் தனக்கு மிகவும் பிடித்திருந்தது எனவும் சச்சின் தெரிவித்துள்ளார். அதனுடன் Ata Thambaycha Naay என்கிற மராத்தி மொழி படமும் தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறி இருக்கிறார். தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் படங்கள் பார்ப்பேன் என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறி இருக்கிறார். அவரின் இந்த பதில் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
சச்சினை கவர்ந்த 3BHK படம்
சச்சின் டெண்டுல்கர் தான் 3 பி.ஹெச்.கே படம் பார்த்ததாக கூறியதைக் கேட்டு உற்சாகம் அடைந்த அப்படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ், நன்றி சச்சின் சார்... இந்த வாழ்த்து, எங்க படத்துக்கு பெரிய அங்கீகாரம் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 3 பி.ஹெச்.கே திரைப்படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவையானி, யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர். சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலியின் வலிகள் நிறைந்த கதையை இப்படம் திரையில் காட்டியது. ஏற்கனவே விமர்சகர்களின் பாராட்டை பெற்ற இப்படம் தற்போது சச்சினிடம் பாராட்டை பெற்றிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
சச்சினின் நக்கல் பதில்
சச்சின் டெண்டுல்கர், ரசிகரின் ஒரு கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்தார். தன்னுடன் உரையாடுவது உண்மையான சச்சின்தானா என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார். இந்திய அணியில் விளையாடிய காலத்தில் சக வீரர்களை விளையாட்டாகக் கேலி செய்வதில் சச்சின் வல்லவர். அதே பாணியில் ரசிகரின் சந்தேகத்திற்கும் பதிலளித்தார். தன்னுடன் உரையாடுவது உண்மையான சச்சின்தானா என்று ரசிகர் கேட்டதும், அந்தக் கேள்வியின் ஸ்கிரீன்ஷாட்டை தனது புகைப்படத்துடன் சச்சின் பகிர்ந்து, 'இப்போ ஆதார் கார்டையும் காட்டணுமா?' என்று நகைச்சுவையாகக் கேட்டார்.
ஜோ ரூட் பற்றி சச்சின் சொன்னதென்ன?
ஜோ ரூட் தனது டெஸ்ட் சாதனைகளை முறியடிப்பாரா என்ற கேள்விக்கும் சச்சின் பதிலளித்தார். ரூட் கிரிக்கெட்டில் அறிமுகமானபோதே அவர் சிறந்த வீரராக வருவார் என்று தான் கணித்ததாக சச்சின் கூறினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் எடுப்பது சாதாரண விஷயமல்ல. 2012ல் நாக்பூரில் ரூட் விளையாடுவதைப் பார்த்தபோது, இங்கிலாந்தின் எதிர்கால கேப்டனைப் பார்க்கிறோம் என்று சக வீரர்களிடம் சொன்னேன். எந்த மைதானத்திலும் பேட்டிங் செய்யும் திறனும் அவரிடம் இருந்தது. ரூட் பெரிய வீரராக வருவார் என்று அப்போதே எனக்குத் தெரியும் என்றார் சச்சின். டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த சச்சினின் (15,921) சாதனையை முறியடிக்க ரூட்டுக்கு (13,543) இன்னும் 2,378 ரன்கள் தேவை.