MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • கோலி, சச்சின் கூட செய்யாத சாதனையை படைத்த கே.எல்.ராகுல்! லார்ட்ஸில் மிகப்பெரும் கெளரவம்!

கோலி, சச்சின் கூட செய்யாத சாதனையை படைத்த கே.எல்.ராகுல்! லார்ட்ஸில் மிகப்பெரும் கெளரவம்!

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2 சதங்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 12 2025, 09:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
IND vs ENG Test: KL Rahul's Record At Lord's
Image Credit : ANI

IND vs ENG Test: KL Rahul's Record At Lord's

இந்திய வீரர் கே.எல்.ராகுல் 'கிரிக்கெட்டின் தாயகம்' என்று அழைக்கப்படும் லார்ட்ஸில் இரண்டு சதங்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி நடந்து வரும் லண்டனின் லார்ட்ஸில் இக்கட்டான நிலையில் இருந்து இந்திய அணியை மீட்ட கே.எல்.ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10வது சதம் (100 ரன்கள்) விளாசி அவுட் ஆனார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
லார்ட்ஸில் கே.எல்.ராகுல் சாதனை
Image Credit : ANI

லார்ட்ஸில் கே.எல்.ராகுல் சாதனை

இதன்மூலம் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலிப் வெங்சர்க்கருக்குப் பிறகு புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் 2 சதங்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார். திலீப் வெங்சர்க்கார் லார்ட்ஸில் 1979, 1982 மற்றும் 1986 ஆண்டுகள் என 3 சதங்கள் விளாசியுள்ளார். லார்ட்ஸில் அதிக சதங்கள் விளாசிய ஒரே இந்திய வீரர் அவர் தான்.

ராகுல் டிராவிட் 6 சதங்கள்

கே.எல்.ராகுல் 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 129 ரன்கள் எடுத்து லார்ட்ஸில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இப்போது அங்கு இரண்டாவது சதத்தை பதிவு செய்து இருக்கிறார். இங்கிலாந்தில் கே.எல்.ராகுலின் நான்காவது சதம் இதுவாகும். இது ரிஷப் பண்ட், சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெங்சர்க்கருடன் இணைந்து ஒரு இந்திய வீரரால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச சதமாகும். இங்கிலாந்தில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச சதங்கள் ராகுல் டிராவிட் பேட்டில் இருந்து வந்துள்ளன. அவர் 6 சதங்கள் அடித்துள்ளார்.

34
சேனா நாடுகளில் ராகுலின் ஆதிக்கம்
Image Credit : ANI

சேனா நாடுகளில் ராகுலின் ஆதிக்கம்

தற்போது, இங்கிலாந்தில் மூன்று சதங்களுடன் இந்திய/ஆசிய ஓப்பனர்களில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையை கே.எல். ராகுல் பெற்றுள்ளார். இந்த சதத்தின் மூலம், 2020களின் இந்த தசாப்தத்தில் அதிக SENA (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) சதங்களைப் பெற்ற இந்திய பேட்ஸ்மேன் ஆனார். இதுவரை 2020களில் இருந்து அவருக்கு ஐந்து சதங்கள் உள்ளன. அவருக்குக் கீழே பண்ட் (4), சுப்மன் கில் (3), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (2) மற்றும் ரவீந்திர ஜடேஜா (1) உள்ளனர்.

சேனா நாடுகளில் அதிக ரன்கள்

33 வயதான கே.எல்.ராகுல் சேனா நாடுகளில் இந்திய ஓப்பனராக தனது வலுவான சாதனையைத் தொடர்ந்து வருகிறார். ஏனெனில் அவர் சேனா நாடுகளில் 14 போட்டிகளில் ராகுல் 1129 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்குக் கீழே ரோஹித் சர்மா (11 போட்டிகளில் 691 ரன்கள்), ஜெய்ஸ்வால் (10 போட்டிகளில் 674 ரன்கள்), கில் (ஆறு போட்டிகளில் 347 ரன்கள்) மற்றும் மயங்க் அகர்வால் (ஏழு போட்டிகளில் 268) ஆகியோர் உள்ளனர்.

44
டெஸ்ட் கிரிக்கெடின் கிங் ராகுல்
Image Credit : ANI

டெஸ்ட் கிரிக்கெடின் கிங் ராகுல்

இப்போதைய ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில், கே.எல்.ராகுல் மூன்று டெஸ்ட்களின் ஐந்து இன்னிங்ஸ்களில் 67.40 சராசரியுடன் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதத்தின் உதவியுடன் 337 ரன்கள் எடுத்துள்ளார். தொடரில் இதுவரை நான்காவது அதிக ரன் குவிப்பாளர் இவர்தான். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் 61 டெஸ்ட்களின் 103 இன்னிங்ஸ்களில் 35.57 சராசரியுடன் 10 சதங்கள் மற்றும் 18 அரைசதங்களின் உதவியுடன் 3593 ரன்கள் எடுத்துள்ளார்.

லார்ட்ஸ் மைதானத்தில் கிடைக்கும் கெளரவம்

லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்கும் பேட்ஸ்மேன்கள் அல்லது ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தும் பவுலர்கள் அல்லது ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தும் பவுலர்கள் ஆகியோரின் பெயர்கள் அங்குள்ள ஹானர்ஸ் போர்டில் பொறிக்கப்படும். இது கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. இந்த டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா, சதம் அடித்த கே.எல்.ராகுல் ஆகியோர் ஹானர்ஸ் போர்டில் இடம்பெற்றுள்ளார். லார்ட்ஸில் சதம் அடிக்காத சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
 
30th T20 • WBBLT20
Live
SS-WSS-W
(10.3 ov)87/6
PS-WPS-W
(20.0 ov)142/7
SS-W need 33 runs in 33 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
368
INDIND
(125.0 ov)486/4
Day 3
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
32nd T20 • WBBLT20
MS-WMS-W
Sun, 22 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL : தோனி முதல் ஸ்டார்க் வரை... 10 ஐபிஎல் அணிகள் கழட்டிவிட்ட பிளேயர்கள் யார்... யார்? முழு பட்டியல் இதோ
Recommended image2
MS Dhoni : தமிழ்நாட்டில் கிரிக்கெட்டில் ஹிட் அடித்த தோனி... சினிமாவில் பிளாப் ஆன கதை தெரியுமா?
Recommended image3
MS Dhoni: ஒரு சிக்ஸர்... ஆயிரம் உணர்வுகள்! தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்குப் பின்னால் இருக்கும் கதை!
Related Stories
Recommended image1
அடுத்தடுத்து சதம் விளாசிய கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட்! புதிய ரிக்கார்ட் படைத்த இந்திய அணி!
Recommended image2
IND vs ENG 3rd Test: தனி ஆளாக போராடும் கே.எல்.ராகுல்! சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved