- Home
- Sports
- Sports Cricket
- சத்தமே இல்லாமல் நடந்த சச்சின் வீட்டு விசேஷம்! சச்சினின் மறுமகள் யார் வீட்டு வாரிசு தெரியுமா?
சத்தமே இல்லாமல் நடந்த சச்சின் வீட்டு விசேஷம்! சச்சினின் மறுமகள் யார் வீட்டு வாரிசு தெரியுமா?
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தொழிலதிபர் ரவி காயின் பேத்தி சானியா சந்தோக்குடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு மும்பையில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் அமைதியாக நடைபெற்றது.

சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் நிச்சயதார்த்தம்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் இளம் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கர், மும்பையில் நடைபெற்ற ஒரு தனிப்பட்ட விழாவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவி காயின் பேத்தி சானியா சந்தோக், அர்ஜுனின் வருங்கால மனைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விழாவில் இரு குடும்பத்தினரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இருப்பினும், இந்த செய்தி குறித்து இரு குடும்பத்தினரிடமிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
யார் இந்த சானியா சந்தோக்?
சானியா சந்தோக் மும்பையைச் சேர்ந்த காய் குடும்பத்தின் வாரிசு. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்த இவர், 'மிஸ்டர். பாவ்ஸ் பெட் ஸ்பா & ஸ்டோர்' என்ற செல்லப்பிராணி பராமரிப்பு பிராண்டை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். காய் குடும்பம் விருந்தோம்பல் மற்றும் உணவுத் துறைகளில் வலுவான நிலையில் உள்ளது. இன்டர்காண்டினென்டல் மெரைன் டிரைவ் ஹோட்டல், புரூக்ளின் க்ரீமரி, பாஸ்கின் ராபின்ஸ் போன்ற பிராண்டுகள் இவர்களுக்குச் சொந்தமானவை.
அர்ஜுன் டெண்டுல்கரின் கிரிக்கெட் பயணம்
25 வயதான அர்ஜுன் டெண்டுல்கர், தனது தந்தை சச்சினைப் போல பேட்ஸ்மேனாக இல்லாமல், இடது கை வேகப்பந்து வீச்சாளராகவும் ஆல்-ரவுண்டராகவும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறார். 2020-21 ஆம் ஆண்டில் மும்பை அணிக்காக அரியானாவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். பின்னர் 2022-23 ஆம் ஆண்டில் கோவா அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். இதுவரை 17 முதல் தரப் போட்டிகளில் 532 ரன்கள் மற்றும் 37 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸில் அர்ஜுன் டெண்டுல்கரின் பயணம்
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜுன் டெண்டுல்கரை ரூ.30 லட்சத்திற்கு வாங்கியது. இருப்பினும், கடந்த சீசனில் பெரும்பாலும் பெஞ்சிலேயே அமர்ந்திருந்தார். இருப்பினும், அவரது பந்துவீச்சு மற்றும் ஆல்-ரவுண்டர் திறன்களால் அணிக்கு பயனுள்ள வீரராக உருவாகி வருகிறார்.
அர்ஜுன் டெண்டுல்கருக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்து மழை
நிச்சயதார்த்தச் செய்தி வெளியானதும், ரசிகர்களும் கிரிக்கெட் பிரியர்களும் அர்ஜுன் மற்றும் சானியா ஜோடிக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். டெண்டுல்கர் குடும்பத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இந்த விழாவின் புகைப்படங்களும் விவரங்களும் ஏற்கனவே வைரலாகிவிட்டன. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.