குட் பேட் அக்லியிடம் சரண்டர் ஆன சச்சின் - ரீ-ரிலீஸ் வசூல் இவ்வளவுதானா?
அஜித்தின் குட் பேட் அக்லி படத்துக்கு போட்டியாக கடந்த ஏப்ரல் 18ந் தேதி ரீ-ரிலீஸ் ஆன சச்சின் திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை பற்றி பார்க்கலாம்.

Sachein Re Release Day 2 Box Office Collection : தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். அவர் நடித்த சச்சின் படம் கடந்த ஏப்ரல் 18ந் தேதி ரீ-ரிலீஸ் ஆனது. காதல் நகைச்சுவைப் படமாக வெளியான சச்சினில், விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்தார். ஜான் மகேந்திரன் இயக்கிய இப்படத்தில் பிபாஷா பாசு, வடிவேலு, சந்தானம், ரகுவரன், தலைவாசல் விஜய், மோகன் சர்மா, பேபி சர்மி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் முதன்முதலில் 2005ம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று வெளியானது. அப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக தற்போது சச்சின் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.
Sachein
Sachein Re Release வசூல்
சச்சின் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக புக்கிங் தளமான புக் மை ஷோவில் 59,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாக படக்குழுவே அறிவித்திருந்தது. இப்படி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரீ-ரிலீஸ் ஆன சச்சின் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 2.3 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இதையடுத்து நேற்று விடுமுறை தினம் என்பதால் சச்சின் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாம் நாளில் சச்சின் பட வசூல் சற்று சரிவை சந்தித்து உள்ளது.
இதையும் படியுங்கள்... Sachein Review: ரீ-ரிலீஸில் விஜய்யின் சச்சின் மாஸ் காட்டியதா?
Sachein Box Office
Sachein Re Release 2ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
சச்சின் திரைப்படம் இரண்டாம் நாளில் தமிழ்நாட்டில் வெறும் ரூ.2 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாம். அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் நேற்று மட்டும் இதைவிட டபுள் மடங்கு வசூலை வாரிக் குவித்துள்ளது. சச்சின் படம் 2005-ம் ஆண்டு வெளியான போது ரூ.10 கோடி வசூலித்து இருந்தது. அந்த வசூலை அப்படம் ரீ-ரிலீஸிலும் அள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது வரை அப்படம் உலகளவில் ரூ.6 கோடி வரை வசூலித்திருக்கும்.
Vijay Next Movie
Vijay கைவசம் உள்ள படம்
விஜய் நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் தயாராகி வருகிறது. எச். வினோத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தோடு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா போன்ற நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. வெங்கட் கே நாராயணன் தனது கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். ஜனநாயகன் திரைப்படம் 2026-ம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... சென்னையில் ஜனநாயகன் ஷூட்டிங்; காண குவிந்த ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்