நடிகர் ஆதியின் மனைவி நிக்கி கல்ராணி கர்ப்பம்?... கோலிவுட்டில் தீயாய் பரவும் செய்தி...!
நட்சத்திர தம்பதிகளான ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி விரைவில் பெற்றோர் ஆக உள்ளதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
தமிழ் தெலுங்கில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் ஆதி. சமீபகாலமாக இவர் அதிகளவில் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். அண்மையில் கூட லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ஆதி. தற்போது தமிழைவிட தெலுங்கில் தான் அதிகளவிலான படங்களில் நடித்து வருகிறார் ஆதி.
நடிகர் ஆதிக்கு கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. இவர் நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தபோது இவர்களிடையே காதல் மலர்ந்தது. அந்த காதல் வெற்றிபெற்று தற்போது இருவரும் ரியல் ஜோடிகள் ஆகி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... வேள்பாரியில் விஜய்யை நடிக்க வைக்க ஆசைப்பட்ட ஷங்கர்... சன் பிக்சர்சால் நடந்த டுவிஸ்ட்
ஆதியும், நிக்கி கல்ராணியும் திருமணத்திற்கு பின் பாரிஸுக்கு ஹனிமூன் கொண்டாட சென்றிருந்தனர். அப்போது அங்குள்ள ஈபிள் டவர் முன் இருவரும் ஜோடியாக எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி குறித்து ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.
அது என்னவென்றால், நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக உள்ளார் என்பது தான். விரைவில் ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி பெற்றோர் ஆக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து அவர்கள் தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. நடிகை நிக்கி கல்ராணி சமீபகாலமாக எந்த படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை என்பதால் இந்த தகவல் உண்மையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... விக்ரம் பட வெற்றிக்கு பின் மீண்டும் விஜய் சேதுபதி உடன் கூட்டணி... சுட சுட வந்த கமல்ஹாசனின் அடுத்த பட அப்டேட்