விக்ரம் பட வெற்றிக்கு பின் மீண்டும் விஜய் சேதுபதி உடன் கூட்டணி... சுட சுட வந்த கமல்ஹாசனின் அடுத்த பட அப்டேட்
விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதி தற்போது மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.
விக்ரம் பட வெற்றிக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசனின் மார்க்கெட் பன்மடங்கு அதிகரித்து உள்ளது. அவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தின் பணிகள் படு ஜோராக நடந்து வருகிறது. இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம், பா.இரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம், வேட்டையாடு விளையாடு 2 என கமல்ஹாசனின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக இணைந்தவர் தான் இயக்குனர் எச்.வினோத். அஜித்தை வைத்து தற்போது துணிவு படத்தை இயக்கி முடித்துள்ள அவர், அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் படத்தை தான் இயக்க உள்ளார். குறுகிய கால தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.
இதையும் படியுங்கள்... யுவன் சங்கர் ராஜா ஒரு ஃபிராடு... லவ் டுடே இயக்குனரின் பதிவால் டென்ஷன் ஆன யுவன் ரசிகர்கள்
இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்ததும் எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் கமல். இப்படத்தின் கதைக்களம் குறித்து எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்தாலும் இதில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்கிற ஹாட் அப்டேட்டும் தற்போது கிடைத்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து, அவர்கள் இருவரும் தற்போது எச்.வினோத் படத்திற்காக மீண்டும் இணைய உள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... இன்னும் ஆரம்பிக்கவே இல்லை! அதற்குள் 'தளபதி 67' படத்தின் ஸ்ட்ரீமிங் ரைட்ஸை பல கோடிக்கு தட்டி தூக்கிய நிறுவனம்!