யுவன் சங்கர் ராஜா ஒரு ஃபிராடு... லவ் டுடே இயக்குனரின் பதிவால் டென்ஷன் ஆன யுவன் ரசிகர்கள்
லவ் டுடே படத்தின் இயக்குனரும், அப்படத்தின் ஹீரோவுமான பிரதீப் ரங்கநாதன், போட்ட பழைய டுவிட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வைரலாகி வருகின்றன.
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், தற்போது இயக்கி நடித்துள்ள லவ் டுடே படம் மூலம் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆகிவிட்டார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இரண்டு வாரங்களாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வசூலை வாரிக்குவித்து வருகிறது. இதுவரை 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ள இப்படம் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
லவ் டுடே படத்தின் வெற்றிக்கு யுவனின் இசையும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். இப்படத்திற்காக பாடல் ரெகார்டிங்கின் போது கூட தனக்கு பழைய யுவன் வேணும் சார் என இயக்குனர் பிரதீப் கேட்டிருந்தார். அவர் கேட்டபடியே இப்படத்தின் மூலம் யுவன் சங்கர் ராஜா பழைய பார்முக்கு திரும்பி உள்ளார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இப்படத்தின் பாடல்கள் ரிப்பீட் மோடில் கேட்கும் அளவுக்கு ஹிட் அடித்துள்ளன.
இதையும் படியுங்கள்... ஒரே நாளில் பிறந்த அப்பா - அம்மாவுக்கு மிக பிரமாண்டமாக பர்த்டே கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் போட்டோஸ்!
இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், யார் என்பதை தெரிந்துகொள்ள இவரின் சமூக வலைதளங்களை நெட்டிசன்கள் நோட்டம் விட தொடங்கிய பின்னர் தான் இவர் போட்ட பழைய டுவிட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வைரலாகி வருகின்றன. அண்மையில் விஜய்யின் ஜில்லா படத்தை விமர்சித்து அவர் கடந்த 2014-ம் ஆண்டு போட்ட டுவிட் வைரலானது.
இந்நிலையில், அவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை திட்டி போட்ட பழைய டுவிட்டுகளை தேடி எடுத்து நெட்டிசன்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். அதன்படி கடந்த 2010-ம் ஆண்டு “யுவன் சங்கர் ராஜா வேஸ்ட், ஃபிராடு” என ஒருபதிவை போட்டுள்ளார். அதேபோல் 2012-ம் ஆண்டு போட்டுள்ள ஒரு பதிவில் யுவன் மங்காத்தா பட தீம் மியூசிக்கை காப்பி அடித்துள்ளதாக கூறி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இந்த இரண்டு பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் பிரதீப் ரங்கநாதனை வறுத்தெடுத்து வருகின்றனர். லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின்னர் யுவன் என் படத்திற்கு இசையமைப்பார் என கனவில் கூட நினைத்ததில்லை என பிரதீப் நெகிழ்ச்சியாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ரஜினி முதல் அஜித் வரை... படிப்பில் ஜீரோவாக இருந்து சினிமாவில் டாப் ஹீரோவாக உயர்ந்த நடிகர்களின் லிஸ்ட் இதோ