ஆர் ஆர் ஆர் பிரபலத்தை புக் செய்த சூப்பர் ஸ்டார்.. வெளியானது நியூ லுக் போட்டோஸ்
ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட பிரபல படங்களுக்கு மேக் ஓவர் செய்த 'ஆலிம் ஹாக்கிங்' (Aalim Hakim) இந்த படத்திற்கு ரஜினியின் ஸ்டைலிசாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Jailer
நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் நெல்சன். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கியிருந்தார். டார்க் காமெடி படமாக வெளியான டாக்டர் வெற்றி இவருக்கு விஜயை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. அதன்படி பீஸ்ட் உருவானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் விமர்சனரீதிகள் மோசமான வெற்றிகளை பெற்றிருந்தாலும் வசூலில் நல்ல கல்லா கட்டி இருந்தது. விஜயின் பீஸ்ட் படப்பிடிப்பின் போது ரஜினியுடன் ஒப்பந்தம் ஆகிவிட்டார் நெல்சன்.
மேலும் செய்திகளுக்கு...Dosa King : ஜெய்பீம் இயக்குனரின் அடுத்த அதிரடி... சரவணபவன் ராஜகோபால் - ஜீவஜோதி கதையை படமாக்குகிறார் TJ ஞானவேல்
இந்த படத்திற்கு முதலில் தலைவர் 169 என தலைப்பு வைக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதில் அனிருத் தான் இசையமைப்பாளர். நெல்சனின் முந்தைய வெற்றிகளில் கைகோர்த்த அனிரூத் இந்த படத்திலும் மாஸ் ஹிட் பாடல்களை கொடுப்பர் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பின்னர் தலைவர் 169 படத்திற்கான ப்ரோமோவை வெளியிட்டிருந்தது தயாரிப்பு நிறுவனம். அதில் சூப்பர் ஸ்டார், அனிருத், நெல்சன் மூவரும் கருப்பு நிற கோட் சூட் அணிந்து மிகவும் ஸ்டைலாக இருந்தனர்.
Jailer
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கால் மேல் கால் போட்டு அவரது தனித்துவமான ஸ்டைலில் கூலிங் கிளாஸ் உடன் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார். இதை அடுத்து படத்திற்கு 'ஜெயிலர் ' என பெயர் வைக்கப்பட்டது குறித்த முதல் பார்வை போஸ்டரும் வெளியானது. அந்த போஸ்டரில் ரத்தத்துடன் கத்தி காணப்பட்டது. அந்த பெயரினின் சிறைச்சாலை சார்ந்த கதையாக இருக்கலாம், பேட்டஸ்டைலில் அமைந்திருக்கலாம் என யூகிக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு...திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்த நடிகை ரோஜா... மக்களோடு மக்களாக நடந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினார்
தற்போது படத்திற்கான முந்தைய வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெறும் ரஜினிகாந்தின் படப்பிடிப்பிற்காக செட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி பூஜை உடன் இந்த படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இறுதியாக சிவா இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த அண்ணா திரைப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை. இதனால் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இந்த படம் கட்டாயம் வெற்றி கதையாக இருக்க வேண்டும் என்னும் சூழல் நிலவி வருகிறது.
Jailer
இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் பச்சன், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், சிவ ராஜ்குமார் உள்ளிட்டோ நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர். தெலுங்கு நடிகர் சிவராஜ்குமார் வில்லனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலைகள் ஜெயிலர் படத்தின் புதிய தகவலாக இந்த படத்திற்கு சிகை அலங்காரம் செய்யும் பிரபலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு...சினிமாவில் நடிக்க சென்ற பாக்யா... அதுவும் பிரபுதேவா உடன் - என்ன ரோல்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
Jailer
ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட பிரபல படங்களுக்கு மேக் ஓவர் செய்த 'ஆலிம் ஹாக்கிங்' (Aalim Hakim) இந்த படத்திற்கு ரஜினியின் ஸ்டைலிசாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்துடன் 'எங்கள் ஒரே மன்னர் ரஜினிகாந்த் உடன் ஒரு புதுமையான நாள்' என குறிப்பிட்டுள்ளார். நெல்சன் படம் என்றாலே டார்க் காமெடி என்று ஆகிவிட்டதால் இந்த படமும் காமெடி கலந்த த்ரில்லராக இருக்கும் என ஒரு பேச்சு அடிபடுகிறது. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.