திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்த நடிகை ரோஜா... மக்களோடு மக்களாக நடந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினார்
நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா, திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார்.
90-களில் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் அரசியலில் குதித்த இவர் படிப்படியாக படங்களில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார். தற்போது தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிகண்டு, நகரி தொகுதி எம்.எல்.ஏவான நடிகை ரோஜாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது. அவருக்கு ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகை ரோஜா ஆடி கிருத்திகை தினமான நேற்று குடும்பத்தினருடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்திருந்தார். ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வந்திருந்த சமயத்தில் மக்களோடு மக்களாக காவடி எடுத்தபடி நடந்து வந்த நடிகை ரோஜா, தனது வேண்டுதலையும் நிறைவேற்றினார்.
இதையும் படியுங்கள்...Dhanush : பார்ட்டியில் தனுஷுடன் நெருக்கம் காட்டிய பிரபல நடிகரின் மகள்... இணையத்தில் தீயாய் பரவும் போட்டோஸ்
முன்னதாக நடிகை ரோஜாவுக்கு கோவில் நிர்வாகத்தினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. அரோகரா என கோஷமிட்டபடி தனது மகன் மற்றும் கணவருடன் கோவிலுக்கு சென்ற ரோஜாவை பார்த்த பக்தர்கள் இவ்வளவு எளிமையாக இருக்கிறாறே என வியப்புடன் பார்த்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா, தான் திருத்தணி முருகன் கோவிலுக்கு தொடர்ந்து வருவதாகவும், தனது தொகுதி மக்களுக்காகவும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி தொடர்ந்து சிறப்பாக நடக்கவும் முருகன் அருள் புரிய வேண்டும் என வேண்டிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... முற்றிலும் பொய்... இதை யாரும் நம்ப வேண்டாம்: 'வாரிசு' தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!