மேலும் உடல் எடை குறைந்து... எலும்பும் தோலுமாய் மாறிய ரோபோ சங்கர் - லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்து மிகவும் மெலிந்த தோற்றத்துடன் காட்சியளிப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர், பின்னர் கலக்கபோவது யாரு, அசத்தப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி அசத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் சினிமாவிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. இதையடுத்து சின்னத்திரையில் இருந்து சினிமா பக்கம் சென்ற ரோபோ சங்கர் படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார்.
அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்த படம் என்றால் அது மாரி தான். அப்படத்தில் தனுஷுடன் நடித்த பின்னர் அஜித்துடன் விஸ்வாசம், சிவகார்த்திகேயன் உடன் வேலைக்காரன் என முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து நடித்து பாப்புலர் ஆனார். ரோபோ சங்கருக்கு இந்திரஜா சங்கர் என்கிற மகள் இருக்கிறார். இவரும் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வருகிறார். இதுவரை விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தி உடன் விருமன் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார்.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா, அதில் தனது தாய் மற்றும் தந்தையுடன் நடனமாடி ரீல்ஸ் போடுவது, புகைப்படங்களை பதிவிடுவது ஆகியவற்றை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திரஜா பதிவிட்ட ரீல்ஸ் வீடியோவில் ரோபோ சங்கர் மெலிந்த தோற்றத்துடன் இருப்பதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், அவருக்கு என்ன ஆச்சு? ஏதேனும் உடல்நலப் பிரச்சனையா என கேள்வி எழுப்பி வந்தனர்.
இதையும் படியுங்கள்... தமிழ் புத்தாண்டில் புது கார் வாங்கிய பிக்பாஸ் ரச்சிதா... அதன் விலை மட்டும் இத்தனை லட்சமா!
இதையடுத்து இதுகுறித்து விளக்கம் அளித்த ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா, அவருக்கு எந்தவித உடல்நல பிரச்சனையும் இல்லை, அவர் படத்துக்காக இப்படி உடல் எடையை குறைத்துள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தந்தை ரோபோ சங்கர் உடன் எடுத்த புகைப்படத்தை இந்திரஜா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படம் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போகினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பார்த்ததைவிட நேற்று இந்திரஜா பதிவிட்ட புகைப்படத்தில் ரோபோ சங்கர் மிகவும் உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாய் காட்சியளிக்கிறார். இதைப்பார்த்து கலங்கிப் போன ரசிகர்கள் எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே என பதிவிட்டு வருகின்றனர். மாரி படத்தில் குண்டான தோற்றத்துடன் பார்த்துவிட்டு தற்போது ரோபோ சங்கரை இப்படி பார்ப்பதற்கு மனசு கஷ்டமா இருக்கு எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யாமேனன் முதல் அதுல்யா வரை.. புடவையில் அழகு தேவதையாக ஜொலித்த நாயகிகளின் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் கிளிக்ஸ்