MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • தமிழ் புத்தாண்டில் புது கார் வாங்கிய பிக்பாஸ் ரச்சிதா... அதன் விலை மட்டும் இத்தனை லட்சமா!

தமிழ் புத்தாண்டில் புது கார் வாங்கிய பிக்பாஸ் ரச்சிதா... அதன் விலை மட்டும் இத்தனை லட்சமா!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தமிழ் புத்தாண்டன்று புது கார் ஒன்றை வாங்கி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 15 2023, 08:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. அதில் இவர் மீனாட்சியாக நடித்திருந்தார். மக்கள் இவரை நேரில் பார்த்தாலும் மீனாட்சி என அழைக்கும் அளவுக்கு அந்த கேரக்டர் மக்கள் மத்தியில் செம்ம ரீச் ஆனது. இதையடுத்து சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார் ரச்சிதா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்ற ரச்சிதா, தற்போது தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ரச்சிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் இவருடன் நெருங்கி பழகி வந்தது சர்ச்சையானது. ஆனால் ரச்சிதா அவரை ஒரு நண்பராகவே பார்த்ததாக கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதையும் படியுங்கள்... ஹீரோக்கள் உருவாக்கப்படுவதில்லை; அவர்கள் பிறக்கிறார்கள் - தோனிக்கு முத்தம் கொடுத்த குஷ்புவின் 88 வயதான மாமியார்

34

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா. தமிழ் புத்தாண்டு தினமான நேற்று ஒரு பதிவை போட்டிருந்தார். அந்த பதிவை பார்த்ததும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அது என்னவென்றால், தமிழ் புத்தாண்டன்று தான் புது கார் ஒன்றை வாங்கி உள்ளதாக கூறி அதன் புகைப்படங்களையும் ரச்சிதா பதிவிட்டு இருந்தார். அவருடன் பிக்பாஸ் ஷெரினும் உடன் சென்று இருந்தார்.

44

ரச்சிதா எம்ஜி ஹெக்டர் காரை தான் வாங்கி இருக்கிறார். சிகப்பு நிறத்தில் அவர் வாங்கியுள்ள அந்த காரின் விலை ரூ.22 லட்சம் இருக்குமாம். இதுகுறித்த புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் அவர் போட்டுள்ள பதிவில், புதிய ஆண்டு... புதிய தொடக்கம்... வெல்கம் ஹோம் எம்ஜி ஹெக்டர் என குறிப்பிட்டு உள்ளார். புத்தாண்டன்று புது கார் வாங்கியுள்ள நடிகை ரச்சிதா மகாலட்சுமிக்கு சோசியல் மீடியா வாயிலாக ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Watch : குறட்டைவிட்ட நாயகனை விரட்டிவிட்ட நாயகி - கவனம் பெறும் ‘குட் நைட்’ பட டீசர்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karthigai Deepam : ரகசியமாக வளைகாப்பு ஏற்பாடு செய்த கார்த்திக்.. ரோகினியை பார்த்து சந்தோஷத்தில் ரேவதி! அடுத்து என்ன?
Recommended image2
Nanjil Vijayan : நான் சாபம்விட்டது உண்மைதான்; ஆனா...? நாஞ்சில் விஜயனுக்கு பதிலடி கொடுத்த வைஷ்ணவி
Recommended image3
Bigg Boss 10 : பிரபல கிரிக்கெட் வீரர்... ஜீ தமிழ் சீரியல் ஹீரோயின் என நீளும் பிக் பாஸ் சீசன் 10 போட்டியாளர் பட்டியல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved