MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மத்திய சிறைச்சாலை முன் குற்றவாளியாக நிற்கும் ஆர்ஜே பாலாஜி! 'சொர்க்கவாசல்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

மத்திய சிறைச்சாலை முன் குற்றவாளியாக நிற்கும் ஆர்ஜே பாலாஜி! 'சொர்க்கவாசல்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், ஹீரோவாகவும் கலக்கி கொண்டிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படமான 'சொர்க்கவாசல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.  

2 Min read
Author : manimegalai a
Published : Oct 19 2024, 02:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
RJ Balaji

RJ Balaji

வானொலியில் ஆர்.ஜே.வாக தன்னுடைய கேரியரை துவங்கி, தற்போது முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் மாறி உள்ள ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான, 'எதிர்நீச்சல்' திரைப்படத்தில் கேமியோ ரோலில் அறிமுகமானார். பின்னர் தீயா வேலை செய்யணும் குமாரு, படத்தில் இவர் நடித்த காமெடி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாயை மூடி பேசவும், வடகறி, இது என்ன மாயம், எச்சன், நானும் ரவுடிதான், ஜில் ஜங் ஜக், போன்ற படங்களில் காமெடி ரோலில் நடித்தார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Actor RJ balaji

Actor RJ balaji

குறிப்பாக 'நானும் ரவுடிதான்' படத்தில் இவர் நடித்த தோஷி பாபா கதாபாத்திரத்திற்கு சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது மற்றும் IIFA உற்சவம் அவார்ட் ஆகியவை கிடைத்தன. காமெடி நடிகராக நடித்துக் கொண்டிருக்கும் போதே, இயக்குனர் கே ஆர் பிரபு இயக்கத்தில், எல்கேஜி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். காமெடி கலந்த ஹீரோ கதாபாத்திரம் என்பதால், இந்த படம் ஆர்.ஜே பாலாஜிக்கு பொருத்தமான கதைக்களமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். மேலும் அரசியல் நையாண்டியாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

பிஸியான அனிருத்.. கடுப்பில் கன்னா பின்னானு சம்பளத்தை ஏற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கீரவாணி?

35
RJ Balaji Direct Suriya 45

RJ Balaji Direct Suriya 45

அடுத்தடுத்து சில படங்களில் காமெடி வேடத்தில் தொடர்ந்து நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி, அதிரடியாக 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தை நடிகை நயன்தாராவை வைத்து இயக்க உள்ளதாக அறிவித்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 'வீட்டில் விசேஷம்' என்கிற படத்தையும், இயக்கி ஹீரோவாக நடித்தார்.  மேலும் 'ரன் பேபி ரன்', 'சிங்கப்பூர் சலூன்' போன்ற படங்களில் நடித்து தனக்கென தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்த ஆர்.ஜே.பாலாஜி, அடுத்ததாக நடிகர் சூர்யாவின் 45 திரைப்படத்தை இயக்குகிறார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
 

45
Sorgavaasal Movie

Sorgavaasal Movie

இதை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி, அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வரும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் போஸ்டரை இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்டுள்ளார். படிக்கட்டுகளுக்கு நடுவே சில கைதிகள் நிற்பது போலவும், மத்திய சிறைச்சாலை மெட்ராஸ் #002575 - 1999 என்கிற என்று எழுதப்பட்ட சிலேட் ஒன்றை கையில் பிடித்தபடி ஆர்.ஜே பாலாஜி நிற்கிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தலைவரின் வேட்டையனை வாஷ் அவுட் செய்ய அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் 7 புதிய படங்கள்!

55
Sorgavaasal Old Movie

Sorgavaasal Old Movie

சொர்க்கவாசல் என்கிற பெயரில், ஏற்கனவே 1954-ஆம் ஆண்டு... கே ஆர் ராமசாமி, எஸ் எஸ் ராஜேந்திரன், அஞ்சலிதேவி, பத்மினி, பி எஸ் வீரப்பா, இயக்குனர் சகாதேவன், உள்ளிட்ட ஏராளமான பழம்பெரும் நடிகர்கள் நடிப்பில், அண்ணாதுரை எழுத்தில், ஏ காசிலிங்கம் இயக்கத்தில், வெளியான மெகா ஹிட் திரைப்படமாகும். இப்படம் வெளியாகி சுமார் 70 ஆண்டுகள் ஆகும் நிலையில், இதே டைட்டிலில் ஆர்.ஜே பாலாஜியின் நடிப்பில் மீண்டும் புதிய படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
2nd TEST • SA vs AUS
Live
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(102.0 ov) 99 & 283/8
Day 5 - Session 3
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
அன்று C2H, இன்று ஓடிடி... 11 ஆண்டுகளுக்கு பின் வெளியான சேரனின் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படம் எப்படி இருக்கு?
Recommended image2
Anirudh - Kavya Maran Marriage : அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் திடீர் மாற்றம்?
Recommended image3
தமிழ் சினிமா தவறவிட்ட பேரழகி: ‘உப்மா’ கதாபாத்திரங்களால் முடங்கிய சுஜா குமாரின் திரைப்பயணம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved