MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிஸியான அனிருத்.. கடுப்பில் கன்னா பின்னானு சம்பளத்தை ஏற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கீரவாணி?

பிஸியான அனிருத்.. கடுப்பில் கன்னா பின்னானு சம்பளத்தை ஏற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கீரவாணி?

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் எம்.எம். கீரவாணி இருவரும் அனிருத் திடீர் என சம்பளத்தை உயர்த்திய கடுப்பில் தங்களின் சம்பளத்தை சரசரவென ஜெட் வேகத்தில் உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 19 2024, 01:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Anirudh

Anirudh

3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில், இசையமைப்பாளராக மாறி... முதல் படத்திலேயே ரசிகர்களையும், திரையுலகினரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இசையமைப்பாளர் அனிருத். இதை தொடர்ந்து இவர் இசையமைத்த எதிர்நீச்சல், டேவிட், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், வேலையில்லா பட்டதாரி  படங்களுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்தது . இவர் இசையில் வெளியான சில மாஸான பாடல்கள் இளசுகளின் ஃபேவரட் லிஸ்டில் இணைந்தது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Rock Star Anirudh

Rock Star Anirudh

தற்போது தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் போன்ற டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் ரவிச்சந்தர், ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்தார். இவரின் இசை ஏராளமான பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்தது. அதே போல் சமீபத்தில் வெளியான தேவாரா, மற்றும் வேட்டையன் பட பாடல்களும் BGM இசை நல்ல வரவேற்பை பெற்றது.

தலைவரின் வேட்டையனை வாஷ் அவுட் செய்ய அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் 7 புதிய படங்கள்!

35
MM Keeravani

MM Keeravani

கைநிறைய படங்களுடன் படு பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் அனிருத் தான் இசையமைக்கும் படங்களுக்கு, 6 கோடி முதலில் வாங்கி வந்த நிலையில், அதை 8 கோடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படும் நிலையில், திடீர் என ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கீரவாணி தங்களின் சம்பளத்தை அதிரடியாக உயர்ந்த ராக்ஸ்டாரும் தான் காரணம் என ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.

தெலுங்கு மீடியாக்களில் சமீபத்திய தகவலின் படி, பாகுபலி, ஆர் ஆர் ஆர், ஆகிய படங்களின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைக்க ஒரு திட்டத்திற்கு ரூ. 10 முதல் 12 கோடி வரை சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. அனிருத்தின் சம்பள உயர்வு தான் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் எம்.எம். கீரவாணி போன்ற முக்கிய இசையமைப்பாளர்களின் சம்பள உயர்வுக்கு காரணம் என DNA இந்தியா தகவலும் தெரிவிக்கிறது.

45
AR Rahman

AR Rahman

மேலும் ஏஆர் ரஹ்மான் ராம் சரண் நடிப்பில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படமான, RC 16 படத்திற்கு ரூ. 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. இது இவர் ஏற்கனவே பெற்ற சம்பளத்தை விட, சுமார் 2 கோடி அதிகமாம்.  அதே போல் புஷ்பா: தி ரைஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது சம்பளத்தை ரூ.8 கோடியாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Diwali OTT Release Movies: தீபாவளி விருந்தாக ஓடிடியில் ரிலீசாகும் 2 சூப்பர் ஹிட் படங்கள்?
 

55
Anirudh Upcoming Movies

Anirudh Upcoming Movies

அனிருத் சமீபத்தில் தனது 34வது பிறந்தநாளை அக்டோபர் 16, 2024 அன்று கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வரவிருக்கும் திரைப்படமான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) பட தயாரிப்பாளர் 'தீமா' என்ற முதல் சிங்கிள் பாடலை வெளியிட்டனர். அனிருத் இசையமைத்து பாடிய இந்தப் பாடலை, படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இது திரைப்படத்தின் முன்னணி நடிகர்களான பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிருத்தி ஷெட்டி நடித்துள்ளனர்.

அனிருத்தின் கைவசம் தற்போது அஜித் குமார் நடித்த விடாமுயற்சி, தளபதி விஜய்யின் தளபதி 69, சிவகார்த்திகேயன் நடித்த SK23 மற்றும் ஷாருக்கானின் அடுத்த திரைப்படம் போன்ற படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved