MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தலைவரின் வேட்டையனை வாஷ் அவுட் செய்ய அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் 7 புதிய படங்கள்!

தலைவரின் வேட்டையனை வாஷ் அவுட் செய்ய அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் 7 புதிய படங்கள்!

அக்டோபர் 25ஆம் தேதி, திரையரங்கில் ரிலீஸ் ஆகவுள்ள, 7 முக்கிய படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

3 Min read
manimegalai a
Published : Oct 19 2024, 12:00 PM IST| Updated : Oct 19 2024, 12:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Actor Rajinikanth Vettaiyans Tamil collection report out

Actor Rajinikanth Vettaiyans Tamil collection report out

இந்த வாரம், திரையரங்கில் சார், ராக்கெட் டிரைவர், ஆலன், உள்ளிட்ட 5 படங்கள் வெளியான போதிலும் வேட்டையன் படத்தை அசைத்து பார்க்க முடியவில்லை. இரண்டாவது வாரமும், பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து வரும் அக்டோபர் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள 7 படங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

27
Lusy

Lusy

லூஸி:

மனதை உருக்கும் கதைகளத்தில் முழுக்க முழுக்க ஈழ தமிழ் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் தான் லூஸி.  இந்த படத்தை டாக்டர் வி ஜனகன் மற்றும் வாணிஜெயா ஆகியோர் பூவரசி மீடியா ப்ரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். இப்படத்தை ஈழவாணி என்பவர் இயக்கி உள்ளார்.

மேலும் அபயம் கணேஷ், பூர்விகா ராஜசிங்கம், ஜானி,,தர்ஷிப் பிரியா, இதயராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெண்களுக்கு எதிரான முக்கிய பிரச்சனையை இந்த படம் பேச உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... சுமார் ட்ரைலர் வெளியாகி ஓராண்டுக்கு பின்னர் இந்த படம் அக்டோபர் 25ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

ரம்யா கிருஷ்ணனுடன் விவாகரத்தா? வீட்டில் அவர் இப்படித்தான் நடந்து கொள்வார்; வம்சி பகிர்ந்த சீக்ரெட்!
 

37
Otrai Panai Maram

Otrai Panai Maram

ஒற்றை பனை மரம்:

நல்ல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு,  இதுவரை 37 சர்வதேச திரைப்பட விருதுகளையும், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை ஆகியவற்றிற்காக சுமார் 12 விருதுகளையும் பெற்ற திரைப்படம் ஒற்றை பனை மரம்.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கி இருக்கும் இந்த படத்தை புதியவன் ராசையா என்பவர் இயக்கி உள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர்  புதியவன் ராசையா, நவயுதா, அஜாதிகா, பெருமாள் காசி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் தணிகைவேல் என்பவர் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஈழத்தை மையப்படுத்தி தான் இந்த படமும் வெளியாக உள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாகிறது.


 

47
Sevagan

Sevagan

சேவகன்:

இயக்குனர் சந்தோஷ் கோபிநாத் இயக்கத்தில், சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் என்பவர் தயாரிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் சேவகன். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் ஹீரோவாக நடித்த ப்ரஜின் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.  இவர் நடிப்பில் ஏற்கனவே வெளியான சில படங்கள் எதிர்பார்த்து அளவுக்கு வரவேற்பை பெறாத நிலையில், இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த படத்தில் சனா என்பவர் நாயகியாக நடித்துள்ளார்.

தளபதி விஜய்க்காக இந்த படத்தின் கதையை உருவாக்கியதாக இயக்குனர் இப்படத்தின் அறிமுக விழாவில் பேசி இருந்தார்.  25 நாட்களில் படமாக்கப்பட்ட இந்த படம் அக்டோபர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீப காலமாக சிறு பட்ஜெட்டில் எடுக்கப்படும் பல படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், இந்த படமும் அப்படிப்பட்ட வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Diwali OTT Release Movies: தீபாவளி விருந்தாக ஓடிடியில் ரிலீசாகும் 2 சூப்பர் ஹிட் படங்கள்?

57
Scene Number 62

Scene Number 62

சீன் நம்பர் 62:

சமீப காலமாகவே சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் சைக்கோ கான்செப்ட் கதைகளுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது இயக்குனர் ஆடம் சமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சீன் நம்பர் 62. இந்த படத்தில் கோகிலா கோபால், கதிரவன்  ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.

வேணு ஜி ராம் என்பவர் நவமுகந்தா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்து உள்ளார். போர் தொழில் திரைப்படம் போன்று சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் மற்றும் சைக்கோ கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படமும் அக்டோபர் 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

67
Aangaaram

Aangaaram

ஆங்காரம்:

எம் ஜே எம் மூவிஸ் நிறுவனம் சார்பில், முகவை ஜமீன் என்பவர் தயாரித்துள்ள ஹாரர் திரைப்படம் தான் ஆங்காரம். நந்தகுமார் ஹீரோவாகவும், டீனா என்பவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். முழுக்க முழுக்க புது முகங்களை வைத்து இப்படத்தை ரஷீத் என்பவர் இயக்கி உள்ளார்.

சில ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆவி, தன்னை நாசம் செய்த ஆண்களை விரட்டி விரட்டி பழிவாங்குவது போல இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பே மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து ட்ரைலர் வெளியான நிலையில் அக்டோபர் 25 வெளியாக உள்ளது.

இவர் தான் காரணமா? தனுஷுடன் மீண்டும் இணைகிறாரா ஐஸ்வர்யா? விரைவில் வருகிறதாம் குட் நியூஸ்!

77
Deepavali Bonus

Deepavali Bonus


தீபாவளி போனஸ்:

நடிகர் விக்ராந்த் மற்றும் நடிகை ரித்விகா இணைந்து நடித்துள்ள திரைப்படம் தீபாவளி போனஸ். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜெயபால் என்பவர் இயக்கி உள்ளார். இதுவரை விக்ராந்த் நடித்த படங்களிலேயே மிகவும் வித்தியாசமான குடும்பத் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க மதுரை மண்ணில் அங்குள்ள கலாச்சாரத்தின் சிறப்புகளை கூறும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், தீபக் குமார் டாலா என்பவர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் இந்த படங்களை தவிர, கண்பேசும் வார்த்தை என்கிற படமும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரிய நடிகர்கள் படங்கள் எதுவும் கடந்த 2 வாரங்களாக வெளியாகத்தால் , 'வேட்டையன்' படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், திரையரங்குகளில் இருந்து வாஷ் அவுட் ஆக வாய்ப்பில்லை.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved