சூர்யாவுக்கு வில்லனாகும் காமெடி நடிகர்! இந்த ட்விஸ்டை எதிர்பார்த்திருக்க மாடீங்க!
சூர்யாவுக்கு வில்லனாக பிரபல காமெடி நடிகர் நடிக்க உள்ளதாக, பத்திரிகையாளர் மற்றும் இயக்குனர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
Suriya 44 movie
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதும், அதிர்ச்சி தோல்வியை தழுவியது. சுமார் ரூ.350 முதல் ரூ.400 கோடி வரை செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரூ. 2000 கோடி வரை வசூல் செய்யும் என படக்குழுவினர் நம்பிக்கையாக தெரிவித்து வந்த நிலையில், இந்த படத்தில் இருந்த தொய்வு ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஒரு சிலர் 'கங்குவா' திரைப்படம் நன்றாக இருக்கிறது என கூறினாலும், திரைப்படம் வெளியான கையோடு எதிர்கொண்ட விமர்சனங்களே, இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் படக்குழுவினர் மற்றொருபுறம் குற்றம்சாட்டினர்.
Kanguva Movie
திரையரங்கில் வெளியான போது கிடைத்த வரவேற்பை விட, 'கங்குவா' ஓடிடியில் வெளியான போது நல்ல வரவேற்பு கிடைத்தது. மொத்தமாக ரூ.150 கோடி வரை மட்டுமே வசூல் செய்தது. சூர்யாவின் ஏற்கனவே தங்கலான் படத்தின் தோல்வியல் துவண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு, இந்த படத்தின் தோல்வி பேரிடியாக அமைந்தது. எனவே சூர்யா தன்னுடைய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உதவும் நோக்கத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
வைல்டு கார்டு போட்டியாளராக வந்தாலும் வெயிட்டான சம்பளத்தோடு வெளியேறிய மஞ்சரி - ராணவ்!
Suriya 44 Movie Director is Karthik Subaraj
சூர்யாவுக்கு 'கங்குவா' படம் கைவிட்டாலும், தற்போது அடுத்தடுத்து வித்யாசமான மற்றும் ரசிகர்களை கவரும் விதமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய 44-வைத்து திரைப்படமாக உருவாகும் 'ரெட்ரோ'. இந்த திரைப்படத்தை பேட்ட, ஜிகர்தண்டா xx, போன்ற திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே வாய் பேச முடியாத பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு புறம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி நல்ல வர வரவேற்பை பெற்றது. குறிப்பாக அதில் தளபதி படத்தில் ரஜினிகாந்த் எப்படி தன்னுடைய காதலை ஷோபனாவிடம் வெளிப்படுத்துவாரோ? அதேபோன்ற ஒரு சீன் இடம் பெற்றிருந்தது, படம் மீனாதா எதிர்பார்ப்பை தூண்டியது.
Suriya Play a Gang Star role
இந்த படத்தில் ஒரு கேங்ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி உள்ளார் சூர்யா. மேலும் 70-ஸ் டூ 80-ஸ் கெட்டப்பில் சூர்யா நடித்துள்ளார். அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வரும் கார்த்திக் சுப்புராஜ் கண்டிப்பாக சூர்யாவுக்கு எப்படி ரோலக்ஸ் கேரக்டர் அதிகம் பேசப்பட்டதோ அதேபோல் ரெட்ரோ கேரக்டரையும் பேசவைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவ்வபோது இந்த படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது.
Suriya 44 exciting Teaser
பிரபல பத்திரிகையாளர் மற்றும் இயக்குனர் சித்ரா லட்சுமணன் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து யாரும் சூர்யா 45 படம் குறித்து அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், இப்படத்தின் இயக்குனரான ஆர்.ஜே.பாலாஜி தான், சூர்யாவுக்கு எதிரான ஒரு வக்கீல் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறியுள்ளார். இந்த படத்தில் சூர்யா வக்கீலாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ஜே-வாக அறியப்பட்டு, காமெடி நடிகராக அறிமுகமாகி... கதையின் நாயகன், இயக்குனர் என பன்முக தன்மையை வெளிப்படுத்தி வரும் ஆர்.ஜே.பாலாஜி இப்போது வில்லன் அவதாரமும் எடுக்க உள்ளது, சூர்யா 44-மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது.
Actor RJ Balaji in Suriya 44
சூர்யாவின் 44வது திரைப்படம் ஒருபுறம் பரபரப்பாக ஷூட்டிங் பணிகள் நடந்து வந்தாலும், மற்றொருபுறம் தன்னுடைய 45 வது படத்திலும் சூர்யா ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். சூர்யாவின் 44-வது திரைப்படமாக உருவாகி வரும், மெட்ரோ திரைப்படம் மே 1-ஆம் தேதி ரிலீஸ் ஆகலாம் என ஏற்கனவே சில தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் - ராம் சரண் இணைந்துள்ள கேம் சேஞ்சர்; கட்டாயம் பார்க்க வேண்டிய 5 காரணங்கள்!