ஷங்கர் - ராம் சரண் இணைந்துள்ள கேம் சேஞ்சர்; கட்டாயம் பார்க்க வேண்டிய 5 காரணங்கள்!
அரசியல் மற்றும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படம், இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை பார்க்க வேண்டிய 5 காரணங்கள் குறித்து பார்ப்போம்.
Game Changer Movie
தன்னுடைய ஒவ்வொரு படத்திலும், தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் ராம் சரண் RRR படத்தின் வெற்றிக்கு பின்னர் நடித்துள்ள, இந்த படத்திற்காக சுமார் 2 வருடங்களுக்கு மேல் ஒதுக்கி நடித்துள்ளார். இதுவே இவருடைய ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான ஆவலை தூண்டியுள்ளது என்றால், அது மிகையல்ல.
Director Shankar
கேம் சேஞ்சர், படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கர் தன்னுடைய அரசியல் பார்வையை பேசியுள்ளார். IAS அதிகாரியாக நடித்துள்ள ராம் சரண், தான் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதத்தில் நடித்துள்ளார். அதே போல், தன்னுடைய அப்பா அப்பண்ணாவின் கனவுக்கு உயிர் கொடுக்கும் ஒரு மகனாகவும் ராம் சரண் நடித்துள்ளார். எனவே இந்த படம் அரசியல் தாண்டி, பலவிதமான பிரச்சனைகள் பற்றி பேச கூடிய ஒரு படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
மீனாவிடம் சில்மிஷம்; மண்டையை உடைத்த விஜயகாந்த்! தயாரிப்பாளர் கூறிய தகவல்!
Fight Scene
பொதுவாக தெலுங்கு திரைப்படங்கள் என்றாலே, ஹீரோக்கள் சண்டையில் செய்யும் அட்ராசிட்டி கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கும். குறிப்பாக தமிழ் திரையுலக ரசிகர்கள் இதனை ட்ரோல் செய்ய துவங்கி விடுவார்கள். ஆனால் இயக்குனர் ஷங்கர் வழக்கமான தெலுங்கு படத்தின் சண்டை காட்சிகளின் சாயலில் இருந்து, இப்படத்தை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி அணைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படி, மிகவும் கவனமாக சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
Game changer Twist and Turns
இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 படத்தில் விட்ட வெற்றியை எப்படியும் 'கேம் சேஞ்சர்' மூலம் பிடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் ரசிகர்கள் கணிக்க முடியாத சில ட்விஸ்ட் அண்ட் டர்ன் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அணைத்து மொழி ரசிகர்களையும் கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நடிச்சிருக்கவே மாட்டேன்! கீர்த்தி சுரேஷ் வேதனை!
Ram charan Duel Role
ராம் சரண் தனது பன்முகத்தன்மையை இந்த படத்தில் வெளிப்படுத்த உள்ளார். அப்பா - மகன் என இரட்டை தோற்றத்தில் நடிக்கிறார். இதுவே இந்த படம் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது. அப்பாவாக நடித்துள்ள ராம் சரணுக்கு, நடிகை அஞ்சலி ஜோடியாக நடித்துள்ள நிலையில், மகனாக நடித்துள்ள ராம் சரணுக்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஜோடியாக நடித்துள்ளார்.
Game Changer Songs
இயக்குனர் ஷங்கரின் படங்களில் எப்போதுமே பாடல்களும் அதில் இடம்பெறும் காட்சிகளும் அதிகம் கவனம் பெரும். அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களுக்கு மட்டும் இயக்குனர் ஷங்கர் 92 கோடி செலவு செய்துள்ளாராம். ஹைனா என்கிற பாடலுக்கு மட்டும் 18 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே அதிக செலவில் உருவான பாடல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஃபிரா ரெட் கேமரா மூலம் உருவாகியுள்ள இந்த பாடலின் காட்சியை கண்டிப்பாக பெரிய திரையில் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த 5 காரணங்களுக்காக கண்டிப்பாக திரையரங்கில் இந்த படத்தை பார்த்து ரசியுங்கள்.
வரப்போகுது நல்ல செய்தி; அடுத்தடுத்து விஜயகாந்த் குடும்பத்தில் நடைபெற உள்ள 2 விசேஷங்கள்!