இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நடிச்சிருக்கவே மாட்டேன்! கீர்த்தி சுரேஷ் வேதனை!
நடிகை கீர்த்தி சுரேஷ் 'பேபி ஜான்' திரைப்படத்தில் நடித்த பொது எழுந்த விமர்சனம் குறித்து வேதனையோடு பேசி உள்ளார்.
கீர்த்தி சுரேஷ்:
தென்னிந்திய திரை உலகில், முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் கடந்த டிசம்பர் மாதம் தன்னுடைய 15 வருட காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், முழுமையாக திரையுலகில் இருந்து விலக உள்ளதாக ஒரு பரபரப்பாக சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில், இதனை உறுதி செய்வது போல் கீர்த்தி சுரேஷும் எந்த படங்களிலும் கமிட் ஆகவும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ரகு தாத்தா:
இந்நிலையில், கடந்தாண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதுவும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. குறிப்பாக தமிழில் இவர் இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் ரகு தாத்தா என்கிற திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஹிந்தி திணிப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த படத்தை, கந்தாரா, சலார் போன்ற திரைப்படங்களை தயாரித்த ஹோமலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படத்தின் டீசர் வெளியான போது, கீர்த்தி சுரேஷுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதற்கு முக்கிய காரணம் ஹிந்தி திணிப்புக்கு எதிராக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது தான். குறிப்பாக ஹிந்தி தெரியாது போடா என கீர்த்தி சுரேஷ் பேசிய வசனம் பட்டி தொட்டி எங்கும் வைரலானது.
வரப்போகுது நல்ல செய்தி; அடுத்தடுத்து விஜயகாந்த் குடும்பத்தில் நடைபெற உள்ள 2 விசேஷங்கள்!
இந்த படத்தில் நடித்து முடித்த கையேடு, நடிகை கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அட்லி தயாரிப்பில் உருவான 'பேபி ஜான்' திரைப்படத்தில் நடித்த கமிட் ஆனார். இதனால் கீர்த்தி சுரேஷ் பல விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது. ரசிகர்கள் சிலர் ஹிந்திக்கு எதிராக நடித்துவிட்டு, இப்போது, ஹிந்தி திரையுலகில் கீர்த்தி சுரேஷ் கால் பதித்து விட்டதாக கூறிய நிலையில்... பாலிவுட் ரசிகர்கள் சிலரும் ஹிந்துக்கு எதிராக நடித்துவிட்டு இப்போ இங்கேயே வந்து நடிக்கிறீங்க என்பது போல் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
கீர்த்தி சுரேஷ் எதிகொண்ட விமர்சனம்:
இது குறித்து முதல் முறையாக தன்னுடைய வேதனையை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்து கொண்டுள்ளார். இப்படி ஆகும்னு தெரிந்திருந்தால், நான் இந்த படத்துல பண்ணி இருக்கவே மாட்டேன். ரகு தாத்தா டைம்ல நான் ஹிந்தியில் அறிமுகமாக போறேன்னு தெரிஞ்சிருந்தா, நான் இந்த படத்தில் நடித்திருக்க மாட்டேன். இந்த படத்தில் ஹிந்தி திணிப்பை தான் சொல்கிறோம். டீசர் வெளியான போது, நம்ம ஆட்கள் எல்லாம் பயங்கரமா சப்போர்ட் பண்ணி கமெண்ட் போட்டாங்க. அதே நேரத்துல அந்த ஊர்காரங்கையெல்லாம் இப்பதான் ஹிந்தியில் அறிமுகமாகிற, அதுக்குள்ள இப்படி எங்க மொழியை பத்தி பேசுறியா என்று கமெண்ட் போட்டாங்க. அடடா இது என்ன இப்படி ஆகிவிட்டதே என நினைத்தேன். இது ஹிந்தி திணிப்பு மொழி பற்றிய படமே தவிர, இந்திக்கு எதிரான படம் இல்லை என்று சொல்லி புரிய வைக்கணும் தான் நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.