MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூர்யா தமிழ் மொழியை நேசிப்பார்: டப்பிங் பேசிய எனக்கு கோல்டு காயின் பரிசாக கொடுத்தார்: ரமேஷ் ராவ் டாக்!

சூர்யா தமிழ் மொழியை நேசிப்பார்: டப்பிங் பேசிய எனக்கு கோல்டு காயின் பரிசாக கொடுத்தார்: ரமேஷ் ராவ் டாக்!

Suriya Gift Gold Coin to Actor Rao Ramesh in Jai Bhim Movie : ஜெய் பீம் படத்தின் டப்பிங் பேசியதை பார்த்த சூர்யா எனக்கு கோல்டு காயின் பரிசாக கொடுத்தார் என்று நடிகர் ரமேஷ் ராவ் கூறியுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 03 2025, 12:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Jai Bhim Movie, Suriya, Rao Ramesh

Jai Bhim Movie, Suriya, Rao Ramesh

Suriya Gift Gold Coin to Actor Rao Ramesh in Jai Bhim Movie : முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா ஹிட் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவரது நடிப்பில் வந்த சிங்கம் 2 படம் தான் கடைசியாக அவர் கொடுத்த ஹிட் படம். அதன் பிறகு கடந்த 11 ஆண்டுகளாக ஒரு ஹிட் படம் கூட சூர்யா கொடுக்கவில்லை. கடந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த கங்குவா படம் கூட விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மோசமான வரவேற்பை எதிர்கொண்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Jai bhim, Rao Ramesh Tamil Dubbing

Jai bhim, Rao Ramesh Tamil Dubbing

ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கங்குவா ரூ. 110 கோடி கூட வசூல் எட்டவில்லை. உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் கிட்டத்தட்ட ரூ.106 கோடி வரையில் தான் வசூல் குவித்தது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாக ரூ.2000 கோடி வரையில் வசூல் குவிக்கும் என்று பேசிய சூர்யா படம் வெளியான பிறகு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இப்போது, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்திலும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்திலும் நடித்து வருகிறார்.

36
Jai Bhim Movie, Suriya Gift Gold Coin to Actor Rao Ramesh in Jai Bhim Movie

Jai Bhim Movie, Suriya Gift Gold Coin to Actor Rao Ramesh in Jai Bhim Movie

இந்த நிலையில் தான் சூர்யாவுடன் இணைந்து ஜெய் பீம் படத்தில் நடித்த நடிகர் ரமேஷ் ராவ் அந்தப் படம் குறித்தும், சூர்யா குறித்தும் ஓபனாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஜெய் பீம் படத்தில் நான் தான் என்னுடைய போஷனுக்கு டப்பிங் பேசியிருந்தேன். எனக்கு தமிழ் நன்றாகவே தெரியும். ஆதலால், நான் தான் டப்பிங் பேசியிருந்தேன். நான் டப்பிங் பேசியதைப் பார்த்து வியந்த சூர்யா என்னுடைய கேரவனுக்கு வந்து கோல்டு காயின் பரிசாக கொடுத்தார். தமிழுக்கு நீங்கள் கொடுத்த மரியாதைக்காக நான் கொடுக்கும் பரிசு. இந்த கதாபாத்திரம் உங்களுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.

46
Suriya, Rao Ramesh, Suriya Gift Gold Coin to Actor Rao Ramesh in Jai Bhim Movie

Suriya, Rao Ramesh, Suriya Gift Gold Coin to Actor Rao Ramesh in Jai Bhim Movie

இந்த ரோல் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டதாக தோன்றுகிறது. சூர்யா கோல்ட் காயின் கொடுக்கும் போது செட்டிலிருந்த எல்லோருமே எனக்கு கை தட்டி பாராட்டு தெரிவித்தார்கள். இதை சொல்வதற்கு என்ன காரணம் என்றால் சூர்யா தமிழ் மொழி மீது அந்தளவிற்கு பற்றும், மரியாதை வைத்திருக்கிறார். அவர் மட்டுமின்றி படக்குழுவினர் அனைவருமே தமிழ் மீது அளவு கடந்த மரியாதை வைத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். உண்மை சம்பவத்தை மையப்படுத்திய இந்த படத்தை இயக்குநர் டி ஜே ஞானவேல் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சூர்யா உடன் இணைந்து லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

 

56
court ordered fir against suriya for jai bhim

court ordered fir against suriya for jai bhim

கடந்த 1993 ஆம் ஆண்டு இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ராஜா கண்ணு மற்றும் செங்கேனி தம்பதியினர் தங்களது உறவினர்களுடன் இணைந்து வயல்களில் நாசம் செய்யும் எலிகள் மற்றும் பாம்புகளை பிடித்து காட்டுப்பகுதிகளுக்கு விடும்ப் பணியை செய்து வந்தனர். அப்போது ஒரு பணக்காரர் வீட்டில் பாம்பு பிடிக்க ராஜா கண்ணு நகையை திருடியதாக கூறி அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கிறார்.

அவர் மட்டுமின்றி அவரது உறவினர்களையும் போலீசார் கைது செய்கின்றனர். அங்கு ராஜா கண்ணு போலீஸ் காவலில் கொல்லப்படுகிறார். இதையடுத்து அவரது உடலை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று போட்டு அவர் தப்பித்து சென்று விட்டதாகவும் அவர் சாலை விபத்தில் உயிரிழ்ந்திருக்கலாம் என்று வழக்கை திசை திருப்புகின்றனர்.

66
Suriya Gift Gold Coin to Actor Rao Ramesh in Jai Bhim Movie

Suriya Gift Gold Coin to Actor Rao Ramesh in Jai Bhim Movie

இருளர் பழங்குடியின மக்களுக்கு கல்வி கற்று தரும் மித்ரா மூலமாக சூர்யாவின் அறிமுகம் கிடைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு ராஜாகண்ணுவை தேடும் வேலை நடக்கிறது. கடைசியில் அவர் உயிரிழந்தது தெரிய வர அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தோட கதை. இந்தப் படம் திரையரங்கில் வெளியாகவில்லை. அப்படி வெளியாகியிருந்தால் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கும். இந்தப் படம் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved