அன்றும்... இன்றும்! பாட்டி வயசிலும் பியூட்டியாக மிளிரும் 90ஸ் நாயகிகளின் வைரல் போட்டோஸ்
90ஸில் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக ஜொலித்த நடித்த கோலிவுட் நடிகைகளின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பற்றி பார்க்கலாம்.

90s Actress then and Now Photos
90களில் தமிழ் சினிமாவில் பல நாயகிகள் மிளிர்ந்தனர். அவர்களில் பலர் நன்கு தமிழ் பேசத் தெரிந்த நடிகைகள். அன்று மிளிர்ந்த நாயகிகள் இன்று எப்படி இருக்கிறார்கள் என்று இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ரேவதி
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து பிரபலமான ரேவதியின் அழகில் மயங்காதவர்கள் இல்லை. இவர் தமிழில் மெளன ராகம், தேவர்மகன் என பல்வேறு மாஸ்டர் பீஸ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு முடி நரைத்துப் போனாலும் அழகு மட்டும் மெருகேகிக் கொண்டே செல்கிறது.
குஷ்பு
தமிழில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர் குஷ்பு. இவருக்கு தற்போது 54 வயது ஆகிறது. ஆனால் அன்று போல் இன்றும் ஸ்லிம்மாகவும் அழகாகவும் இருக்கிறார் குஷ்பு. அவர் எப்படி இருக்கிறார் என்பதை பாருங்கள்.
சரிதா
தமிழில் பல ஹிட் படங்களில் நடித்த சரிதா இன்று ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் மாறியிருக்கிறார். இவர் அண்மையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
சுகாசினி
பல வெற்றிப் படங்களில் நடித்த சுகாசினி இன்றும் அதே அழகுடனே இருக்கிறார். நடிகை சுகாசினி இயக்குனர் மணிரத்னத்தை திருமண்ம் செய்துகொண்ட பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
பானுப்ரியா
பல தென்ன்நிதிய மொழி படங்களில் நடித்த பானுப்ரியா. தற்போது நியாபக மரதியால் அவதிப்பட்டு வருகிறார். அன்றும் இன்றும் அவர் எப்படி இருக்கிறார் என்பதை இந்த புகைப்படம் மூலமே தெரிந்துகொள்ளலாம்..
அம்பிகா
தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர் அம்பிகா. இவரது தங்கை ராதாவும் சினிமாவில் முன்னணி நடிகையாக கோலோச்சினார். தற்போது அவர் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்.