- Home
- Cinema
- அறிவிப்பு வரும் முன்பே லீக் ஆன ‘தளபதி 67’ டைட்டில்... இதென்னப்பா கவுதம் மேனன் பட தலைப்பு மாதிரி இருக்கு!
அறிவிப்பு வரும் முன்பே லீக் ஆன ‘தளபதி 67’ டைட்டில்... இதென்னப்பா கவுதம் மேனன் பட தலைப்பு மாதிரி இருக்கு!
Thalapathy 67 : வாரிசு படத்தில் நடித்து முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தின் தலைப்பு லீக் ஆகி உள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து நான்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக நடிகர் விஜய் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தை அவர் இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வரும் விஜய், அப்படத்தில் நடித்து முடித்த பின்னரே தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். லோகேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றதனால் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதையும் படியுங்கள்... மச்சக்காரன்யா இந்த விஜய் தேவரகொண்டா..! டேட்டிங் செல்ல போட்டி போடும் பாலிவுட் நடிகைகள்
இதனால் இப்படம் குறித்த அப்டேட்டுகளும் அடிக்கடி வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி சமீபத்தில் நடிகை சமந்தா இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து இயக்குனர் ரத்னகுமாரும் இப்படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இப்படம் குறித்த மேலும் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு நான் வாழும் உலகம் என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் எடிட்டராக பணியாற்ற உள்ள பிலோமின் ராஜின் விக்கிபீடியா பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளதால் இதுதான் தளபதி 67 படத்தின் டைட்டிலாக இருக்கும் என கூறி வருகின்றனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இது கவுதம் மேனன் பட டைட்டில் போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அபார திறமையால் அம்மா ரோஜாவையே மிஞ்சும் மகள்..! இளம் வயதிலேயே கிடைத்த மிக உயரிய விருது..!