மச்சக்காரன்யா இந்த விஜய் தேவரகொண்டா..! டேட்டிங் செல்ல போட்டி போடும் பாலிவுட் நடிகைகள்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் செல்ல இரண்டு பாலிவுட் நடிகைகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட்டில் முன்னணி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கரண் ஜோகர். இவர் காஃபி வித் கரண் என்கிற ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தற்போது 7-வது சீசன் நடைபெற்று வருகிறது.
இதில் சமந்தா, அக்ஷய் குமார், சாரா அலி கான், ஜான்வி கபூர், ரன்பீர் கபூர் என ஏராளமான பிரபலங்கள் இந்த சீசனில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர். இதில் கரண் ஜோகர் கேட்டும் கேள்விகளுக்கு அவர்கள் வெளிப்படையாக பதில் அளித்துள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் சாரா அலிகான் மற்றும் ஜான்வி கபூர் இணைந்து கலந்துகொண்ட எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது.
இதையும் படியுங்கள்... பாலிவுட் போனதும் சம்பளத்தை டாப் கியரில் உயர்த்திய நயன்! லேடிசூப்பர்ஸ்டாரின் லேட்டஸ்ட் சம்பளம் எவ்வளவு தெரியுமா
இதற்கான ப்ரோமோ வீடியோவை கரண்ஜோகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் நடிகை சாரா அலிகானிடம் நீங்கள் டேட்டிங் செய்ய விரும்பும் நடிகர் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு முதலில் அப்படி யாரும் இல்லை என மறுத்த சாரா அலிகான், இறுதியாக விஜய் தேவரகொண்டாவின் பெயரை கூறினார். அப்போது அருகில் இருந்த ஜான்வி கபூர் ஷாக்கிங் ரியாக்ஷன் ஒன்றை கொடுத்தார்.
காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் ஜான்வி கபூர் பங்கேற்றபோது, விஜய் தேவரகொண்டா தான் தனது கிரஷ் என கூறி இருந்தார். தற்போது சாரா அலிகானும் அவருடன் டேட்டிங் செல்ல விருப்பம் தெரிவித்ததால் ஜான்வி இப்படி ரியாக்ட் செய்துள்ளார். இந்த எபிசோடு நாளை ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்... பிரமாண்ட செட்... மிகப்பெரிய நட்சத்திர கூட்டணி... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' லேட்டஸ்ட் அப்டேட்!