- Home
- Cinema
- பாலிவுட் போனதும் சம்பளத்தை டாப் கியரில் உயர்த்திய நயன்! லேடிசூப்பர்ஸ்டாரின் லேட்டஸ்ட் சம்பளம் எவ்வளவு தெரியுமா
பாலிவுட் போனதும் சம்பளத்தை டாப் கியரில் உயர்த்திய நயன்! லேடிசூப்பர்ஸ்டாரின் லேட்டஸ்ட் சம்பளம் எவ்வளவு தெரியுமா
Nayanthara Salary : பாலிவுட்டுக்கு சென்ற பிறகு நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளதால் கோலிவுட் தயாரிப்பாளர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, தற்போது முதன்முறையாக பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். அங்கு இவர் ஹீரோயினாக நடிக்கும் முதல் படத்தை அட்லீ இயக்குகிறார். ஜவான் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து நயன்தாரா நடிக்க உள்ள 75-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இப்படத்தில் அவர் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் சத்யராஜும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... Keerthy: துளியும் மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த போட்டோ...அவரின் நேச்சுரல் பியூட்டி சீக்ரெட் டிப்ஸ்
தற்காலிகமாக லேடி சூப்பர்ஸ்டார் 75 என அழைக்கப்படும் இப்படத்திற்கு அன்னப்பூரணி என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்க உள்ளார். அவர் இயக்க உள்ள முதல் படம் இதுவாகும். இவர் ஏற்கனவே இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார்.
இதுவரை 5 கோடி முதல் 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்த நயன்தாரா, இப்படத்தில் நடிக்க ரூ.10 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம். பாலிவுட்டுக்கு சென்ற பிறகு நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஜாரா மகள் அல்ல இன்னொரு தாய்... மகள் செய்த செயலால் கதறி அழுத அர்ச்சனா!! வைரலாகும் வீடியோ..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.