- Home
- Cinema
- ஹீரோவை விட வில்லன் விஷால் ரொம்ப காஸ்ட்லி! விஜய் 67-ல் வில்லனாக நடிக்க விஷாலுக்கு இத்தனை கோடி சம்பளமா?
ஹீரோவை விட வில்லன் விஷால் ரொம்ப காஸ்ட்லி! விஜய் 67-ல் வில்லனாக நடிக்க விஷாலுக்கு இத்தனை கோடி சம்பளமா?
லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க நடிகர் விஷால் கேட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு ரிலீசான செல்லமே படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்த விஷால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராகவும் உயர்ந்தார்.
இவர் நடிப்பதோடு மட்டுமின்றி படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்த விஷாலுக்கு கடந்த சில ஆண்டுகள் மிகவும் சோதனையான ஒன்றாக அமைந்தன. ஏனெனில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அவர் நடித்த இரும்புத்திரை படத்துக்கு பின் அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதையும் படியுங்கள்...‘காஃபி வித் காதல்’ மூலம் மீண்டும் ஃபார்முக்கு வந்தாரா சுந்தர் சி? - முழு விமர்சனம் இதோ
தற்போது இவர் கைவசம் லத்தி, மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 ஆகிய படங்கள் உள்ளன. இதில் லத்தி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மறுபுறும் மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 67 படத்திலும் விஷால் வில்லனாக நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஷாலை மார்க் ஆண்டனி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து பேசினார். இந்நிலையில், தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க விஷால் கேட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஹீரோவாக நடிக்க ஒரு படத்துக்கு 15 கோடி வரை சம்பளமாக வாங்கும் விஷால், தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க 20 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளாராம். இப்படத்துக்கு பின் அவருக்கு வில்லன் வாய்ப்பு அதிகம் கிடைக்க வாய்ப்பு இருப்பதால், வில்லன் விஷால் ரொம்ப காஸ்ட்லி என்பதை சொல்லும் விதமாக அவர் இப்படி செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்... விஜய்க்கு ஒர்க் அவுட் ஆன ‘லவ் டுடே’ கோமாளி இயக்குனருக்கும் கைகொடுத்ததா? - முழு விமர்சனம் இதோ