ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை ருசித்த இவர், அடுத்ததாக இயக்கிய திரைப்படம் தான் லவ் டுடே. இப்படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார் பிரதீப்.
லவ் டுடே படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ளார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. இப்படத்தின் டுவிட்டர் விமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... சறுக்கிய டாப் ஹீரோஸின் படங்கள்... பரிதாப நிலையில் பாலிவுட் - இந்த வருடம் மட்டும் இத்தனை பிளாப் படங்களா..!

நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிச்சு ரசிச்சு பார்த்த படம் லவ் டுடே. பிரதீப் நீ செம்மயா. நீண்ட நாட்களுக்கு பிறகு யுவனின் இசை ரசிக்கும்படியாக இருந்தது. இது தான் அவரின் சரியான கம்பேக் திரைப்படம். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு டுவிட்டில், “சமூகத்திற்கு அவசியம் தேவையான படம் இது. லவ் டுடே என்கிற தலைப்புக்கு ஏற்றவாறு அழுத்தமான மெசேஜ் உடன் படமும் உள்ளது. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உள்பட ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் தலைவணங்குகிறேன். இந்த படம் கோலிவுட்டின் சிறந்த படங்கள் பட்டியலில் இடம்பெறும்” என தெரிவித்துள்ளார்.
படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், “லவ் டுடே படம் செம்மயா இருக்கு. முதல் பாதி முழுக்க காமெடியாகவும், இரண்டாம் பாதியில் காமெடியும் எமோஷனும் கலந்து இருந்தது அருமை. பிரதீப்பின் நடிப்பு சூப்பர். யுவனின் பின்னணி இசை வெறித்தனமாக இருந்தது. தியேட்டரில் பார்க்க செம்ம ஒர்த் ஆன படம். கன்பார்ம் பிளாக்பஸ்டர்” என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு டுவிட்டர் பதிவில், “லவ் டுடே படத்தில் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் நிறைய காமெடிகள் உள்ளன. ஸ்மார்ட் ஆக எழுதியுள்ளார். காமெடிக்கு கேரண்டியாக நிறைய காட்சிகள் படத்தில் இருக்கு. சிறப்பான பின்னணி இசையை கொடுத்துள்ளார் யுவன்” என பாராட்டி உள்ளார்.
படம் குறித்து நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “லவ் டுடே சிறந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படம். படத்தில் எமோஷனல் காட்சிகள் சூப்பராக ஒர்க் அவுட் ஆகி உள்ளன. யுவனின் பின்னணி இசை செம. பிரதீப் நீ வேறலெவல்யா. இவானாவின் நடிப்பு நன்றாக உள்ளது. யோகிபாபு - ரவீனா வரும் காட்சிகள் சூப்பர். கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், லவ் டுடே படத்தை சிறப்பாக எழுதி உள்ளதோடு மட்டுமின்றி அதை சூப்பராக படமாக்கி உள்ளார் பிரதீப். அவரின் நடிப்பும் டயலாக் டெலிவரியும் பார்க்கும்போது தனுஷை பார்ப்பது போல் உள்ளது. மொத்தமாக நகைச்சுவை நிறைந்த எமோஷனல் படமாக உள்ளது. கண்டிப்பாக தியேட்டரில் பாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு டுவிட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : “லவ் டுடே ஒரு ஃபீல் குட் படம். காதல் ஜோட் தங்களது போனை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொண்ட பின் என்ன நடக்கிறது என்பது தான் கதை. பிரதீப் ஹீரோ ரோலுக்கு கச்சிதமாக பொறுந்துகிறார். இவானா, ராதிகா, சத்யராஜ் என கதாபாத்திர தேர்வு அருமை. யுவனின் பாடல்களும், பின்னணி இசையும் மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. எமோஷனல் கனெக்ட் சூப்பர். தொய்வு இல்லை, கிளைமாக்ஸ் அருமை. குடும்பத்தோட பார்க்கலாம் என குறிப்பிட்டு 5க்கு 4 மதிப்பெண்கள் கொடுத்துள்ளார்.
மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும் போது படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகப்போகிறது என்பது தெரிகிறது. டுவிட்டரில் இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களே இல்லை. அந்த அளவுக்கு படம் சூப்பராக இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... நாகசைதன்யா உடனான காதல் சர்ச்சைக்கு மத்தியில் திருமண போட்டோவை வெளியிட்டு ஷாக் கொடுத்த பொன்னியின் செல்வன் நடிகை
