சுந்தர் சி இயக்கத்தில் ரைசா, அம்ரிதா ஐயர், ரைசா, ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் காஃபி வித் காதல் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்த இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

காமெடி படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் சுந்தர் சி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இவர் சமீப காலமாக அதிகளவில் பேய் படங்களை இயக்கியதால் இவரிடம் இருந்து எப்படா காமெடி படம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதற்காக அவர் இயக்கிய படம் தான் காஃபி வித் காதல்.

இப்படத்தை குஷ்பு தயாரித்துள்ளார். கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 மற்றும் ஆக்‌ஷன் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்ததால், காஃபி வித் காதல் படம் மூலம் அவர் கம்பேக் கொடுப்பாரா என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அதையெல்லாம் இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே படம் பார்த்த ரசிகர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.

இதையும் படியுங்கள்... விஜய்க்கு ஒர்க் அவுட் ஆன ‘லவ் டுடே’ கோமாளி இயக்குனருக்கும் கைகொடுத்ததா? - முழு விமர்சனம் இதோ

இப்படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், அம்ரிதா ஐயர், டிடி, ரைசா வில்சன், யோகிபாபு, சம்யுக்தா, ரெடின் கிங்ஸ்லி, மாளவிகா ஷர்மா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தாலும், யாரின் கதாபாத்திரமும் மனதில் பதியும் படியாக இல்லை என்பதே இப்படத்தின் மிகப்பெரிய மைனஸாக சொல்லப்படுகிறது.

சுந்தர் சி படங்கள் என்றாலே காமெடிக்கு கேரண்டி இருக்கும். அதேபோல் இப்படத்திலும் இண்டர்வெல்லுக்கு முன் ஒரு அரை மணிநேரத்திற்கு வயிறு குலுங்க சிரிக்கும் அளவுக்கு காமெடி காட்சிகள் உள்ளதாகவும் மற்றவை எல்லாம் கிரிஞ்ச் காமெடியாக உள்ளதாகவும் நெட்டிசன்கள் கதறுகின்றனர். அதேபோல் கிளாமர் வழக்கம்போல் இப்படத்திலும் சற்று தூக்கலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மொத்தமாக சொல்லப்போனால் சுந்தர் சி இன்னும் பார்முக்கு வரவில்லை என்பதே இந்த படத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் போட்டுள்ள டுவிட்டர் விமர்சனம் இதோ

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... பாலிவுட் வசம் சிக்கி படாதபாடு படும் கைதி ரீமேக்..! படத்துல ஒன்னில்ல... ரெண்டு ஹீரோயினாம்