பாலிவுட் வசம் சிக்கி படாதபாடு படும் கைதி ரீமேக்..! படத்துல ஒன்னில்ல... ரெண்டு ஹீரோயினாம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஹீரோயினே இல்லாமல் எடுக்கப்பட்ட கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
தமிழ் திரையுலகில் வரிசையாக பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர் என்கிற அந்தஸ்தை பெற்றுவிட்டார்.
இவர் இயக்கிய படங்களை ரீமேக் செய்ய பாலிவுட்டில் கடும் போட்டி நிலவி வருகிறது. அதன்படி இதுவரை இரண்டும் படங்களின் ரீமேக் உரிமைகளை கைப்பற்றிவிட்டனர். அதில் மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கை சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மும்பைகார் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... அஜித் படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா? வெளிநாட்டில் போனியாகாத துணிவு.. வாரிசு பட பிசினஸில் பாதிகூட கிடைக்கலயாம்
அதேபோல் லோகேஷின் கைதி படமும் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இப்படத்தின் ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கைப்பற்றி உள்ளார். இப்படத்தை அவரே இயக்கியும் நடிக்க உள்ளார். போலா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கைதி படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் அப்படத்தில் ஹீரோயினும் கிடையாது, பாடல்களும் கிடையாது. ஆனால் பாலிவுட்டில் ரீமேக் செய்யும் போது அதை எதிர்பார்க்க முடியுமா. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. கைதி ரீமேக்கில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். ஹீரோயினே இல்லாமல் எடுக்கப்பட்ட படத்திற்கு எதற்கு இரண்டு ஹீரோயின்கள் என்பது தான் நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது. அந்த இரண்டு ஹீரோயின்களில் ஒருவர் தபு மற்றொருவர் அமலா பால். இவர்கள் இருவருக்கும் படத்தில் என்ன ரோல் கொடுக்கப்போகிறார் என்பது இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்... மோடியை பாராட்டிய விஷால்... ஒரே டுவிட்டில் நோஸ் கட் செய்த பிரகாஷ் ராஜ்