அஜித் படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா? வெளிநாட்டில் போனியாகாத துணிவு.. வாரிசு பட பிசினஸில் பாதிகூட கிடைக்கலயாம்
துணிவு படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டியதால் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இப்படம் நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்கு போட்டியாக ரிலீசாக உள்ளது. இதனால் வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கி உள்ளது.
துணிவு படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கடந்த மாதம் வெளியானது. ரிலீசுக்கு 2 மாதங்கள் உள்ள போதிலும் வாரிசு மற்றும் துணிவு படங்களின் பிசினஸ் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளன. குறிப்பாக வாரிசு படம் ரிலீசுக்கு முன்பே ரூ.280 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலன் 80-வது மணி விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்பு!
மறுபுறம் துணிவு படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் சிறப்பாக நடைபெற்று வந்தாலும், இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை 17 கோடிக்கு மட்டுமே விற்பனை ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. வாரிசு படத்தோடு ஒப்பிடுகையில் இது 50 சதவீதம் கூட இல்லையாம்.
அஜித் படத்திற்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட காரணம், அவர் நடிப்பில் இதற்கு முன் ரிலீசான படங்கள் வெளிநாட்டில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாதது தான் என கூறப்படுகிறது. இதனால் தான் துணிவு படத்தின் பிசினஸ் வெளிநாட்டில் மந்தமடைந்து காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி நடிகர் அஜித்தும் நல்ல படத்துக்கு புரமோஷன் தேவையில்லை என சொல்லி புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டேன் என சொன்னதும் இப்படத்தின் பிசினஸ் பாதிக்கப்படுவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் பொங்கல் ரேஸில் வாரிசு தான் டாப்பில் உள்ளதுபோல் தெரிகிறது.
இதையும் படியுங்கள்... திருமணத்துக்கு பின் சினிமாவில் இருந்து விலகுகிறாரா ஹன்சிகா?... அவரே சொன்ன ‘நச்’ பதில்