- Home
- Cinema
- குளிக்க 25 லிட்டர் பால்... படுக்க ரோஜா மெத்தை கேட்ட நடிகர்! நீ நடிக்கவே வேணாம் கிளம்புனு விரட்டிவிட்ட படக்குழு
குளிக்க 25 லிட்டர் பால்... படுக்க ரோஜா மெத்தை கேட்ட நடிகர்! நீ நடிக்கவே வேணாம் கிளம்புனு விரட்டிவிட்ட படக்குழு
குளிக்க 25 லிட்டர் பாலும், படுக்க ரோஜா மெத்தையும் கேட்டதால் தனக்கு பட வாய்ப்பு பறிபோனதாக பிரபல நடிகர் ஒருவர் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

போஜ்புரி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரவி கிஷான். இவர் கடந்த 1992-ம் ஆண்டு வெளிவந்த பீதாம்பர் என்கிற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு தனது ரசிகர் வட்டத்தை பெரிதாக்கினார். தற்போது 53 வயதாகும் ரவி கிஷான், சமீபத்திய பேட்டியில் தான் எதிர்கொண்ட அட்ஜெஸ்மெண்ட் பிரச்சனை பற்றி பேசினார்.
அதன்படி தான் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் ஹீரோயின் ஒருவர் தனக்கு போட்டு இரவு நேரத்தில் காபி குடிக்க அழைத்ததாகவும், அப்போது மறுத்ததால் மீண்டும் மீண்டும் போன் போட்டு டார்ச்சர் செய்தார் என்றும், அதன்பிறகு தான் அவர் தன்னை அட்ஜஸ்மெண்ட்டுக்கு அழைத்தது தெரியவந்தது எனவும் அவருக்கு நோ சொல்லிவிட்டதால் அப்படத்தில் இருந்தே தன்னை நீக்கிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... நான் அப்படி சொல்லவே இல்லை! முன்னாள் கணவர் நாகசைதன்யா டேட்டிங் குறித்து பரவிய வதந்திக்கு ரியாக்ட் செய்த சமந்தா!
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் குளிக்க பால் கேட்டதால் தனக்கு பட வாய்ப்பு பரிபோன விஷயத்தைப் பற்றி பேசி உள்ளார் ரவி கிஷான். அதன்படி அனுராக் கஷ்யப் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் கேங்ஸ் ஆஃப் வசேபூர். இப்படத்தில் நடிக்க முதலில் கமிட் ஆன ரவி கிஷான், படக்குழுவிடம் தனக்கு தினமும் குளிக்க 25 லிட்டர் பால் வேண்டும் என்றும் படுக்க ரோஜா மெத்தை வேண்டும் என கேட்டதால் அதெல்லாம் தரமுடியாது எனக்கூறி அப்படத்தில் இருந்தே தன்னை நீக்கிவிட்டதாக அவர் கூறினார்.
இதுபோன்ற ஆடம்பர விஷயங்களைக் கேட்டதால் தான் தனது கெரியரே அடிவாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் பிக்பாஸ் வீட்டுக்கு சென்றுவந்த பின்னரே குளிக்க பால், படுக்க ரோஜா மெத்தை போன்றவற்றை கேட்பதை நிறுத்திவிட்டேன் என்றும் ரவி கிஷான் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். நடிகர் ரவி கிஷான் தமிழில் டி.ராஜேந்தர் இயக்கிய மோனிசா என் மோனாலிசா என்கிற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... யாராலும் கண்டுபிடிக்க முடியாத வேறலெவல் லுக்கில் வந்து சிஎஸ்கே மேட்ச் பார்த்த தனுஷ் - வைரலாகும் வீடியோ