யாராலும் கண்டுபிடிக்க முடியாத வேறலெவல் லுக்கில் வந்து சிஎஸ்கே மேட்ச் பார்த்த தனுஷ் - வைரலாகும் வீடியோ

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் பட லுக்கில் வந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய ஐபிஎல் லீக் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் கண்டுகளித்தார்.

Dhanush watch csk match in chepauk stadium with his sons viral video

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய ருத்துராஜ் கெய்க்வாட், கான்வே ஆகியோர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர்.

இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடின இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ராகுல், மேயர்ஸ் ஆகியோர் அதிரடி துவக்கம் கொடுத்தனர். இதனால் லக்னோ அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதையடுத்து அதிரடியாக ஆடிய மேயர்ஸ் ஆட்டமிழந்ததும் அடுத்து வந்த பேட்ஸ்மென்கள் பெரியளவில் சோபிக்காததால் அந்த அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதையும் படியுங்கள்... மினி கோடம்பாக்கமாக மாறிய சேப்பாக்கம்... சிஎஸ்கே மேட்சை பார்க்க இத்தனை சினிமா பிரபலங்கள் வந்திருந்தார்களா..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று தான் ஐபிஎல் போட்டி நடைபெற்றதால், அப்போட்டியை காண திரையுலக பிரபலங்கள் பலரும் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்தனர். கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், சிவகார்த்திகேயன், குரேஷி, ரவீனா, மாகாபா ஆனந்த், ஹரீஷ் கல்யாண் ஆகியோர் இப்போட்டியை மைதானத்தில் கண்டுகளித்தனர்.

அதேபோல் நடிகர் தனுஷும் தனது மகன்களுடன் வந்து ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்துள்ளார். யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையில் நீண்ட தாடி, நீளமான தலைமுடி உடன் வந்து சிஎஸ்கே போட்டியை தனுஷ் கண்டுகளித்துள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் கேப்டன் மில்லர் படத்திற்காக இந்த வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ரஜினியின் அந்த முடிவால் தான் தர்பார் பிளாப் ஆனதா? இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios