மினி கோடம்பாக்கமாக மாறிய சேப்பாக்கம்... சிஎஸ்கே மேட்சை பார்க்க இத்தனை சினிமா பிரபலங்கள் வந்திருந்தார்களா..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிய ஐபிஎல் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் நடக்கும் போட்டி இது என்பதால் இதனைக் காண ஏராளமான சினிமா பிரபலங்களும் வந்திருந்தனர். அதன் புகைப்படத் தொகுப்பு இதோ.
நடிகர் சிவகார்த்திகேயன், நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆதரிக்க மஞ்சள் நிற டீசர்ட் அணிந்தபடி வந்து போட்டியை கண்டுகளித்தனர்.
சிஎஸ்கே போட்டியை காண சென்னை சேப்பாக்கம் மைதானம் வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா உடன் அமர்ந்து போட்டியை பார்த்து ரசித்தார்.
சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகையான நடிகை யாஷிகா ஆனந்த், சேப்பாக்கம் மைதானத்தில் குக் வித் கோமாளில் பிரபலம் குரேஷி உடன் எடுத்த கியூட் செல்பி.
மெளன ராகம் சீரியலில் நடித்து பிரபலமாகி, தற்போது குக் வித் கோமாளியில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ரவீனா மற்றும் நடன இயக்குனர் மணி உடன் ஸ்டேடியத்தில் வைத்து குரேஷி எடுத்த செல்பி புகைப்படம் இது.
இதையும் படியுங்கள்... IPL 2023: லக்னோ அணியை பொட்டளம் கட்டிய மொயின் அலி..! சிஎஸ்கே அபார வெற்றி
விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த், கலக்கப்போவது யாரு பிரபலம் ஷரத் உடன் வந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியை கண்டுகளித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகையான வரலட்சுமி சரத்குமார் சிஎஸ்கே ஜெர்சி அணிந்து சேப்பாக்கம் மைதானத்தில் எடுத்த புகைப்படம் இது.
மேயாத மான், ஆடை, குலுகுலு போன்ற படங்களின் இயக்குனரும், மாஸ்டர், விக்ரம் படங்களின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார் சேப்பாக்கம் மைதானத்தில் எடுத்த வேறலெவல் புகைப்படம் இது.
விஜய்யின் பிகில், கடந்த ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட் ஆன லவ் டுடே போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சிஎஸ்கே போட்டியின் போது எடுத்த செல்பி இது.
இதையும் படியுங்கள்... IPL 2023: சேப்பாக்கம் கோட்டையில் 1426 நாளுக்கு பிறகு அடுத்தடுத்து சிக்ஸர்: 5000 ரன்களை கடந்து தோனி சாதனை!