நான் அப்படி சொல்லவே இல்லை! முன்னாள் கணவர் நாகசைதன்யா டேட்டிங் குறித்து பரவிய வதந்திக்கு ரியாக்ட் செய்த சமந்தா!
'சகுந்தலம்' படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்து கொண்ட நடிகை சமந்தா, தன்னுடைய முன்னாள் கணவர் நாகசைதன்யா, நடிகையுடன் டேட்டிங் செய்து வருவது குறித்து, மிகவும் காட்டமான கருத்தை கூறியதாக வெளியான, தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு... தன்னுடைய முதல் பட ஹீரோவான நடிகர், நாக சைதன்யாவை 7 ஆண்டுகளுக்கும் மேலாக, உருகி... உருகி.. காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் கோவாவில் நடந்தது. மேலும் இந்த திருமணம் நாக சைதன்யா குடும்ப வழக்கத்தின் படியும், நடிகை சமந்தாவின் குடும்ப வழக்கப்படி கிறிஸ்தவ முறை படியும் நடைபெற்றது.
தன்னுடைய திருமணத்திற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார் சமந்தா. குறிப்பாக அவருடைய திருமண புடவையில் தன்னுடைய காதலரை சந்தித்த முதல் இடம், அவருடன் நடித்த முதல் படம், டேட்டிங் சென்ற முதல் இடம், அவர் தனக்கு கொடுத்த முதல் பரிசு, போன்ற அனைத்தையுமே மிகவும் நேர்த்தியாக பட்டு இழைகளால் நெய்திருந்தார். அதே போல் தன்னுடைய கணவரின் நினைவாக பல்வேறு டாட்டூக்களை போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'சரிகமப' டைட்டில் வின்னர் மற்றும் பின்னணி பாடகி ராக் ஸ்டார் ரமணியம்மாள் அதிர்ச்சி மரணம்..!
திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து திரையுலகில் கவனம் செலுத்தி வந்த சமந்தா... திரையுலகை விட்டு விலகி, குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்த நிலையில்... ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தன்னுடைய விவாகரத்து குறித்த தகவலை கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவித்தார்.
விவாகரத்துக்கு பின்னரும், தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களையும், மிகவும் போல்டான கதாபாத்திரங்களையும் மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் சமந்தா, கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக மாயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டார். ஒருவழியாக தற்போது தன்னுடைய உடல்நல பிரச்சனையில் இருந்து மீண்டு, மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக, தெலுங்கில் 'குஷி' என்கிற படத்தில் நடித்து வருகிறார் சமந்தார்.
தேவதை வம்சம் நீயோ... வெள்ளை நிற சேலையில் ஏஞ்சல் போல் ஜொலித்த நயன்! அழகில் மயங்கிய ரசிகர்கள்!
மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'சகுந்தலம்' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது, புராண கதையை மையமாக வைத்து உருவாக்கி உள்ள இப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், பட குழுவினர் பம்பரமாக சுழன்று ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தை குணசேகரன் இயக்க, மலையாள நடிகர் தேவ் மோகன் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பணியில் கலந்து கொண்ட சமந்தாவிடம் நாக சைதன்யாவின் டேட்டிங் குறித்த கேள்வி எழுப்பப்பட்டதாகவும்.... அதற்கு அவர் "எவன் எவ கூட டேட்டிங் செய்தால் எனக்கு என்ன? நான் எதை பற்றியும் கவலைப்பட மாட்டேன். காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், அது கடைசியில் கண்ணீரில் தான் முடியும். குறைந்த பட்சம் அந்தப் பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறியதாகவும், ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவிய நிலையில், இதற்கு முதல் முறையாக நடிகை சமந்தா ரியாக்ட் செய்துள்ளார்.
அதாவது நான் இப்படி ஒரு கருத்தை, கூறவே இல்லை... என சமந்தா தெரிவித்துள்ளார். இதன் மூலம் சமந்தா முதல் முறையாக, தன்னுடைய முன்னாள் கணவர் நாக சைத்தாயா காதல் விவகாரம் குறித்து பேசியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.