MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'சரிகமப' டைட்டில் வின்னர் மற்றும் பின்னணி பாடகி ராக் ஸ்டார் ரமணியம்மாள் அதிர்ச்சி மரணம்..!

'சரிகமப' டைட்டில் வின்னர் மற்றும் பின்னணி பாடகி ராக் ஸ்டார் ரமணியம்மாள் அதிர்ச்சி மரணம்..!

பின்னணி பாடகியும், சரிகமப நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராக் ஸ்டார் ரமணியம்மாள்... உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Apr 04 2023, 05:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய திறமை மூலம் மட்டுமே பின்னணி பாடகியாக மாறியவர் ரமணியம்மாள். 1954 ஆம் ஆண்டு சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில் பிறந்த இவருக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆனது. பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக, தன்னுடைய பாட்டு திறமையை கோவில் திருவிழா, மற்றும் மேடைகளில் வெளிப்படுத்தி வந்த ரமணியம்மாள், பல வருடங்கள் தன்னுடைய பிள்ளைகளை காப்பாற்ற, வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றியவர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டும், ரமணியம்மாளுக்கு காதல் படத்தில் இடம்பெற்ற நாட்டுப்புற பாடலான, 'தண்டட்டி கருப்பாயி' பாடலில் கோரஸ் பாடும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அடுத்தடுத்து... காத்தவராயன், தெனாவட்டு, ஹரிதாஸ் போன்ற படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தாலும் இவருக்கான அங்கீகாரம் என்பது கிடைக்கவில்லை.

கிஸ் கொடுத்தா ராகவா லாரன்ஸ் படத்துல சான்ஸ்... அட்ஜெஸ்மெண்ட் பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சொன்ன பகீர் சம்பவம்

36

பின்னர் ரமணியம்மாள், கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சரிகமப',  ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். 63 வயதில்.. ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட பழைய பாடல்கள், மற்றும் நாட்டுப்புற பாடல்களை பாடிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், அடுத்தடுத்து பல படங்களில் பின்னணி பாடகியாக மாறினார்.

46

அந்த வகையில்,  ஜூங்கா , சண்டக்கோழி 2, காப்பான், மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, போன்ற படங்களில் அடுத்தடுத்து பாடல்கள் பாடும் வாய்ப்பை பெற்றார். 

ஃபாண்டா பாட்டில் ஸ்ட்ரக்ச்சர் அழகி திவ்யபாரதியா இது? கல்லூரி நாட்களில் எப்படி இருக்கிறார் பாருங்கள்!

56

இவர் பாடுவதற்காக மேடை ஏறிவிட்டால், வெறித்தனமாக தன்னுடைய பாடலை வெளிப்படுத்துவார் எனவே நடுவர்கள் இவருக்கு வைத்த பெயர் தான் ராக் ஸ்டார். பின்னர் அதுவே அவரின் அடைமொழியாக மாறி ராக் ஸ்டார் ரமணியம்மாள் என அழைக்கப்பட்டார். 'சரிகமப' நிகழ்ச்சியில் இளம் போட்டியாளர்களுக்கு கடைசி வரை டஃப் கொடுத்து, டைட்டிலை கைப்பற்றியதோடு மிகப்பெரிய ரொக்க தொகையை பரிசாகவும் வென்றார். 

66

மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி ' சீரியலில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக, ராக் ஸ்டார் ரமணியம்மாள் தன்னுடைய 69 வயதில் உயிரிழந்துள்ளார். இவரின் மரணம் ஒட்டு மொத்த இசை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேவதை வம்சம் நீயோ... வெள்ளை நிற சேலையில் ஏஞ்சல் போல் ஜொலித்த நயன்! அழகில் மயங்கிய ரசிகர்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Songs: கொட்டபாக்கும் கொழுந்து வெத்தலையும்.! முப்பது ஆண்டுகளை கடந்தும் நாட்டாமை இசை மனதை மயக்குவது ஏன்?
Recommended image2
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved