ஃபாண்டா பாட்டில் ஸ்ட்ரக்ச்சர் அழகி திவ்யபாரதியா இது? கல்லூரி நாட்களில் எப்படி இருக்கிறார் பாருங்கள்!
பேச்சிலர் பட நடிகை... திவ்ய பாரதியின் கல்லூரி கால புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தற்போது தமிழில் இளம் நடிகையாக இருக்கும் திவ்ய பாரதி கோயம்புத்தூரை சேர்ந்தவர். 2015 ஆம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றது, மாடலிங் துறையில் இவர் அழுத்தமாக கால் பாதிக்க காரணமாக அமைந்தது.
மாடலிங் செய்து கொண்டே பட வாய்ப்புகளை தேடி வந்த திவ்ய பாரதி ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.
தேவதை வம்சம் நீயோ... வெள்ளை நிற சேலையில் ஏஞ்சல் போல் ஜொலித்த நயன்! அழகில் மயங்கிய ரசிகர்கள்!
தற்போது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் திவ்ய பாரதி, பிக்பாஸ் முகென் ராவ் ஜோடியாக 'மதில் மேல் காதல்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் கதிருக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் ஒரு சில மாதங்களுக்கு முன்னர், தனது கல்லூரி காலங்களில் உடல் அமைப்பு குறித்து கேலி கிண்டலுக்கு ஆளானதாக சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். குறிப்பாக "ஃபாண்டா பாட்டில் அமைப்பு" "எலும்புக்கூடு" "பெரிய பட் கேர்ள்" போன்ற விமர்சனங்களையும் எதிர்கொண்டதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது போன்ற விமர்சனங்கள் தன்னை கடுமையாகப் பாதித்தது என்றும், என் உடலை வெறுக்கும் அளவுக்கு என்னைத் தள்ளியது என்றும்... இதனால் மக்கள் முன் நடக்க கூட பயமாக இருந்தது என தெரிவித்திருந்தார்.
பின்னர் 2015 இல், நான் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கைத் திறந்து எனது மாடலிங் பயணத்தைத் தொடங்கினேன். நான் பதிவிடும் ஒவ்வொரு புதிய படத்திலும், குறிப்பாக என் உடல் வகைக்காக நான் பாராட்டுகளைப் பெற ஆரம்பித்தேன் அதுமே எனக்கு மிகப்பெரிய தைரியத்தை கொடுத்ததாக கூறி இருந்தார்.
வித்தியாசமான உடல் அமைப்பைக் கொண்டிருப்பது பரவாயில்லை, அந்த விமர்சனங்களுக்கு மத்தியில் நீங்கள் உங்களை எப்படி நேசிக்கிறீர்கள் என்பதைப் பற்றியது என பாசிட்டிவாக பேசிய திவ்யா பாரதியின் கல்லூரி கால புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.