புதிய தொழில் தொடங்கிய இயக்குனர் ஹரி - ப்ரீத்தா தம்பதி.! திறந்து வைத்து வாழ்த்திய நடிகர் சூர்யா! வைரல் போட்டோஸ்
இயக்குனர் ஹரி துவங்கியுள்ள குட் லக் ஸ்டுடியோவை... அரசியல்வாதிகளுடன் சேர்ந்து திறந்து வைத்துள்ளார் நடிகர் சூர்யா. இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல கமர்சியல் படங்களை இயக்கி, ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளனர் இயக்குனர் ஹரி. தற்போது படம் இயக்குவதை தாண்டி, தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து புதிய தொழில் ஒன்றை துவங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்த்தவர் இயக்குனர் ஹரி. இயக்குனர் பாலச்சந்தரிடம் கல்கி படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார். இதை தொடர்ந்து இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், அல்லு அருஜுனா போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய பின்பே இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
முத்து மணியால் செய்த... அழகிய வெள்ளை நிற லெஹங்காவில் அசரவைக்கும் ஜான்வி கபூர்! லேட்டஸ்ட் போட்டோஸ்!
இயக்குனர் ஹரி தமிழில் முதல் முதலாக கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் பிரசாந்த், மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியாகி சுமாரான வெற்றி கண்டா 'தமிழ்' படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகம் கொடுத்தார்.
இந்த படத்தை தொடர்ந்து, விக்ரமை வைத்து ஹரி இயக்கிய சாமி திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. பின்னர் முன்னணி இயக்குனர்கள் லிஸ்டில் இடம்பிடித்த இவர், அடுத்தடுத்து இயக்கிய கோவில், அருள், ஐயா, தாமிரபரணி, வேல், சேவல், சிங்கம் சீரிஸ், வேங்கை போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்ப்பை கிடைத்தது.
அந்த வகையில் கடைசியாக இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'யானை' . இந்த படத்தை தன்னுடைய மைத்துனர் அருண் விஜயை ஹீரோவாக வைத்து இயக்கி இருந்தார். இப்படமும் ஹரி மற்றும் அருண் விஜய் என இருவருக்குமே வெற்றி படமாகவே அமைந்தது.
இந்நிலையில் இயக்குனர் ஹரி, தன்னுடைய அடுத்த படம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... திடீர் என தன்னுடைய மனைவியுடன் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஏற்கனவே இயக்குனர் ஹரி டப்பிங் ஸ்டுடியோ ஒன்றிய திறக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதனை நடிகர் சூர்யா, தமிழக சபாநாயகர் அப்பாவு , அமைச்சர்கள் சேகர் பாபு உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் கலந்து கொண்டு குட் லக் என பெயரிடப்பட்ட இந்த ஸ்டுடியோவை ரிப்பன் நறுக்கி திறந்து வைத்துள்ளனர்.
மேலும் நடிகர் விஜயகுமார், நடிகையும் ப்ரீதாவின் தங்கையான ஸ்ரீ தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது. நடிகர் சூர்யா நேற்று தன்னுடைய குடும்பத்தினருடன் கீழடி அருங்காட்சியத்திற்கு சென்ற நிலையில், இன்று தன்னுடைய ஆஸ்தான இயக்குனரார் ஹரி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.