முத்து மணியால் செய்த... அழகிய வெள்ளை நிற லெஹங்காவில் அசரவைக்கும் ஜான்வி கபூர்! லேட்டஸ்ட் போட்டோஸ்!
நடிகை ஜான்வி கபூர் வெள்ளை நிற உடையில், வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
அழகிலும், நடிப்பிலும் அம்மா ஸ்ரீதேவிக்கு நிகராக குறுகிய காலத்தில் வளர்ந்து நிற்பவர் ஜான்வி கபூர்... திரையுலகில் அறிமுகமானத்தில் இருந்து, தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி வந்த ஜான்வி, முதல் முறையாக டோலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
'ஆர் ஆர் ஆர்' படத்தின் வெற்றிக்குப் பின்னர் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ள 30-வது படத்தில், ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் ஜான்வி. இந்த படத்தின் பூஜை கடந்த வாரம் மிகப்பிரமாண்டமாக ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கிய நிலையில், விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
62 வயதில் உங்க அளப்பறைக்கு அளவில்லையா? ஒரே படத்தில் 4 ஹீரோயின்கள்! காண்டாகும் யங் ஹீரோக்கள்!
ஜான்வி டோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் படத்தை, பிரபல இயக்குனர் கொரட்டல சிவா இயக்குகிறார். இந்த படத்தின் பூஜையில், RRR பட இயக்குனர் ராஜமௌலி கலந்து கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார். மேலும் தற்போது இவரின் கைவசம் சில பாலிவுட் படங்களும் உள்ளன.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர், தற்போது வித்தியாசமான அவுட் பிட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. முத்து மணிகளால் செய்யப்பட்ட ஆடையை தான் ஜான்வி அணிந்துள்ளார். இவரின் இந்த லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.