- Home
- Cinema
- 62 வயதில் உங்க அளப்பறைக்கு அளவில்லையா? ஒரே படத்தில் 4 ஹீரோயின்கள்! காண்டாகும் யங் ஹீரோக்கள்!
62 வயதில் உங்க அளப்பறைக்கு அளவில்லையா? ஒரே படத்தில் 4 ஹீரோயின்கள்! காண்டாகும் யங் ஹீரோக்கள்!
நடிகர் பாலகிருஷ்ணா, அடுத்ததாக நடிக்க உள்ள தன்னுடைய 108-ஆவது படத்தில், 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ள தகவல் அதிகார பூர்வமாக வெளியாகி இளம் ஹீரோக்களை செம்ம காண்டாக்கி உள்ளது.

தெலுங்கு திரையுலகில், 62 வயதிலும் இளம் ஹீரோக்களை மிஞ்சும் வகையில்... ஆக்ஷன், ரொமான்ஸ், டூயட் என தன்னுடைய படங்களை களைகட்ட வைத்து வருகிறார் பாலையா.
குறிப்பாக, தற்போது டோலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, த்ரிஷா, தமன்னா,ஸ்ருதிஹாசன் என அணைத்து முன்னணி நடிகைகளுடனும் நடித்துவிட்டார்.
டோலிவுட் திரையுலகையில் இவர் அழைப்பு விடுத்தது, எந்த ஹீரோயினாவது அந்த பட வாய்ப்பை ஏற்கவில்லை என்றால், டோலிவுட் திரைப்படங்களில் அவர்கள் நடிப்பதே கேள்விக்குறியாகிவிடும். எனவே இவரிடம் இருந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால், உடனே ஓகே என கூறி விடுவார்கள். சம்பள விஷயத்திலும் பாலையா படு தாராளம்.
இந்நிலையில் இவர் நடிப்பில் இந்த ஆண்டு, 'வீர சிம்ஹா ரெட்'டி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்த நிலையில், அப்பா பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும், அவரது அம்மாவாக ஹனி ரோஸ் நடித்திருந்தார். மகன் பாலய்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.
மேலும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தங்கையாகவும், வில்லியாகவும், மிரட்டி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் 108வது படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக டோலிவுட்டின் இளம் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளார் என்கிற தகவல் சமீபத்தில் வெளியானது. வெறும் 21 வயதே ஆன ஸ்ரீலீலா எப்படி பாலகிருஷ்ணா படத்தில் என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பிய நிலையில் இவரை தொடர்ந்து காஜல் அகர்வாலும் நடிக்க ஒப்பந்தமானார்.
மேலும் இன்னும் இரண்டு ஹீரோயின்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஏற்கனவே, பாலையாவுக்கு அம்மாவாகவும், ஜோடியாகவும் நடித்த... ஹனி ரோஸ் இந்த படத்திலும் கமிட் ஆகியுள்ளார். அதே பிரியங்கா ஜவால்கரும் இணைந்துள்ளார். தமன் இசையில் உருவாகும் இந்த படத்தை அனில்ரவிபொடி இயக்க உள்ளார். இந்த படம் ஆயுத பூஜை படத்தின் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.