Rashmika mandanna : சமந்தா தவறவிட்ட தமிழ்படத்தை தட்டித்தூக்கிய ராஷ்மிகா - டைட்டிலுடன் வெளிவந்த அப்டேட்
நடிகை சமந்தா நடிப்பதாக இருந்த தமிழ் படத்தில் தற்போது அவருக்கு பதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராஷ்மிகா, கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த சுல்தான் படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ராஷ்மிகாவுக்கு கிடைத்தது. அதன்படி வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார் ராஷ்மிகா. தற்போது இவர் பாலிவுட்டில் பிசியாக நடித்து வரும் நிலையில், மேலும் ஒரு தமிழ்படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
அதன்படி ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்திற்கு ரெயின்போ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை சாந்தரூபன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இப்படம் தமிழ் தெலுங்கில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க உள்ளார்.
இதையும் படியுங்கள்... நயன் மகன்களின் பெயருக்கு இதுதான் அர்த்தமா! முதன்முறையாக குழந்தைகளின் முகம்தெரிய கியூட் போட்டோ வெளியிட்ட விக்கி
எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் ராஷ்மிகா நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன் அவர்கள் தயாரித்த சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் ராஷ்மிகா. இப்படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது சமந்தா தான். அவருக்கு மயோசிடிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தில் இதில் நடிக்க முடியாது என அவர் விலகியதால் தற்போது அந்த வாய்ப்பு நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு சென்றுள்ளது.
ரெயின்போ திரைப்படத்திற்கு கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் ராஷ்மிகா உடன் மலையாள நடிகர் தேவ் மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. அதன் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... நாடகத்தில் நடிக்க தயாராகும் ரஜினிகாந்த்..! விரைவில் நிறைவேறப்போகும் சூப்பர்ஸ்டாரின் நீண்ட நாள் ஆசை