MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நயன் மகன்களின் பெயருக்கு இதுதான் அர்த்தமா! முதன்முறையாக குழந்தைகளின் முகம்தெரிய கியூட் போட்டோ வெளியிட்ட விக்கி

நயன் மகன்களின் பெயருக்கு இதுதான் அர்த்தமா! முதன்முறையாக குழந்தைகளின் முகம்தெரிய கியூட் போட்டோ வெளியிட்ட விக்கி

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது குழந்தைகளின் அழகிய புகைப்படங்களையும் அவர்களது பெயர்களையும் அதற்கான விளக்கத்தையும் பதிவிட்டு உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 03 2023, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இயக்குனர் விக்னேஷ் சிவன், நானும் ரெளடி தான் படத்தை இயக்கியபோது அவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்துவந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட ஓட்டலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

25

இதையடுத்து திருமணம் முடிந்த 4 மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது இந்த ஜோடி. பின்னர் தான் அவர்கள் இருவரும் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தினாலும், தாங்கள் விதிமுறைகளை பின்பற்றி தான் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படியுங்கள்... நாடகத்தில் நடிக்க தயாராகும் ரஜினிகாந்த்..! விரைவில் நிறைவேறப்போகும் சூப்பர்ஸ்டாரின் நீண்ட நாள் ஆசை

35

இரட்டைக் குழந்தைகள் பிறந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் குழந்தைகளின் பெயரை வெளியிடாமல் இருந்து வந்தனர். அதோடு குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை பலமுறை பதிவிட்டாலும் குழந்தைகளின் முகம் தெரியாதவாரே பதிவிட்டு வந்தார் விக்னேஷ் சிவன். இதனிடையே சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்டபோது நடிகை நயன்தாரா தனது குழந்தைகளின் பெயர்களை முதன்முறையாக வெளிஉலகத்துக்கு அறிவித்தார்.

45

இந்நிலையில், நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனது குழந்தைகளுடன் கடற்கரை ஓரத்தில் எழில்கொஞ்சும் இயற்கை அழகுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் நயன்தாரா தனது மகன்களை மடியில் வைத்திருக்கும்படியான புகைப்படமும் இடம்பெற்று உள்ளது. அதில் குழந்தைகளின் முகங்களும் தெரிகிறது. இதுவரை குழந்தைகளின் முகம் தெரியாதபடி புகைப்படங்களை பதிவிட்டு வந்த விக்னேஷ் சிவன் தற்போது முதன்முறையாக மகன்களின் முகம் தெரிய எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றனர்.

55

அதுமட்டுமின்றி தனது மகன்களின் பெயர்களான உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் ஆகியவற்றின் இடையில் இருக்கும் N இந்த உலகின் சிறந்த அன்னையான நயன்தாராவை குறிக்கும் எனக் குறிப்பிட்டு வாழ்வின் மகிழ்ச்சியான அழகான தருணம் இது என பதிவிட்டுள்ளார். நயன்தாரா மகன்களின் பெயர்கள் வித்தியாசமாக இருந்தாலும் அவை கடவுளைக் குறிக்கும் பெயர்கள் என நெட்டிசன்கள் தேடிக்கண்டுபிடித்து பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... தேவதை வம்சம் நீயோ... வெள்ளை நிற சேலையில் ஏஞ்சல் போல் ஜொலித்த நயன்! அழகில் மயங்கிய ரசிகர்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
வீட்டுக்குள் நுழைய தடை! ஆனந்தியை விரட்டியடிக்கும் லலிதா - அதிர்ச்சியில் அன்பு! Singapenne Serial Promo Today
Recommended image2
ஒரே ஒரு சிரிப்பு.. ஓராயிரம் ஹார்ட்டின்ஸ்!" - இன்டர்நெட் குயீன் மமிதா பைஜுவின் ரகசியம் என்ன?
Recommended image3
TRP ரேஸில் டாப் 10 இடங்களை தட்டிதூக்கிய தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved