நாடகத்தில் நடிக்க தயாராகும் ரஜினிகாந்த்..! விரைவில் நிறைவேறப்போகும் சூப்பர்ஸ்டாரின் நீண்ட நாள் ஆசை
மேடை நாடகத்தில் நடிக்க வேண்டும் என்கிற தனது நீண்ட நாள் கனவு நிறைவேறப்போகிறது என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர லால் சலாம் மற்றும் ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் என மேலும் இரண்டு படங்களை கைவசம் வைத்து உள்ளார். இப்படி பிசியான நடிகராக வலம் வரும் ரஜினி கடந்த சில தினங்களுக்கு முன் மும்பைக்கு சென்றிருந்தார்.
அங்கு முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி தொடங்கி இருக்கும் கலாச்சார மையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது ரஜினியுடன் அவரது மகள் செளந்தர்யாவும் உடன் சென்றிருந்தார். மொத்தம் 4 அடுக்குகளில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள நீடா அம்பானியின் கலாச்சார மையத்தில் 2000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய பிரம்மாண்ட அரங்கம், ஸ்டூடியோ என ஏராளமான வசதிகளும் உள்ளன.
இந்த கலாச்சார மையத்தின் திறப்பு விழாவில் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமே கலந்துகொண்டது. இந்த பிரம்மாண்ட துவக்க விழாவில் கலந்துகொண்டது குறித்து நடிகர் ரஜினிகாந்தும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவின் முதல் முறையாக ஆடம்பரமான பிரம்மாண்ட கலையரங்கம் மும்பையில் கட்டப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்... இடுப்பில் கைவைத்து சில்மிஷம் செய்தவருக்கு; பளார்.. பளார்னு அறைவிட்டு கன்னத்தை பழுக்க வைத்த பாக்யலட்சுமி நடிகை
இதனை சாத்தியமாக்கிய என்னுடைய அருமை நண்பர் முகேஷ் அம்பானிக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற அற்புதமான, தேசபக்தியுடனான மனதைக் கவரும் கலை நிகழ்ச்சிகளை நடத்திய நீதா அம்பானியை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. இதுபோன்ற ஒரு பிரம்மாண்டமான தியேட்டரில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது. விரைவில் அது நிறைவேறும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி நீதா அம்பானி கலாச்சார மையத்தில் உள்ள பிரம்மாண்ட கலையரங்கத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் ரஜினி. மேடை நாடகத்தில் நடிக்க வேண்டும் என்கிற தனது நீண்ட நாள் கனவு நிறைவேறப்போகிறது என ரஜினி கூறியுள்ளதைப் பார்த்தால் வெகு விரைவிலேயே அவர் மேடை நாடகத்தில் நடிப்பார் போல தெரிகிறது.
இதையும் படியுங்கள்... இந்திய மைக்கேல் ஜாக்சனுக்கு இன்று பிறந்தநாள்... நயன் செய்த சம்பவத்தால் டோட்டலாக மாறிய பிரபுதேவாவின் வாழ்க்கை