MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்திய மைக்கேல் ஜாக்சனுக்கு இன்று பிறந்தநாள்... நயன் செய்த சம்பவத்தால் டோட்டலாக மாறிய பிரபுதேவாவின் வாழ்க்கை

இந்திய மைக்கேல் ஜாக்சனுக்கு இன்று பிறந்தநாள்... நயன் செய்த சம்பவத்தால் டோட்டலாக மாறிய பிரபுதேவாவின் வாழ்க்கை

நடனத்தின் மூலம் இந்திய திரையுலகில் முத்திரை பதித்த பிரபுதேவா இன்று தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி மைசூரில் பிறந்தார். அவரை நடன உலகிற்கு கொண்டு வந்த பெருமை அவரது தந்தை முகூர் சுந்தரையே சாரும்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 03 2023, 09:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிரபுதேவா இந்திய திரையுலகே வியந்து பார்க்கும் அளவுக்கு வளர்ந்ததற்கு அவரது தந்தையின் பங்கு மிகஅதிகம். முகூர் சுந்தரால் தான் பிரபுதேவா நடனத்தில் இவ்வளவு பெரிய இடத்தை அடைய முடிந்தது. பிரபு தேவாவின் தந்தை முகூர் சுந்தர் சிறந்த நடன அமைப்பாளராக இருந்துள்ளார். நடிப்பு, நடனம் ஆகியவற்றை அவர் தனது தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டார்.

25

கமல்ஹாசனின் வெற்றி விழா படத்தின் மூலம் நடன இயக்குனராக தனது வாழ்க்கையை தொடங்கினார் பிரபுதேவா. அதன் பிறகு அவரது வாழ்க்கையே மாறிவிட்டது. பிரபுதேவாவின் தந்தை மிகப்பெரிய விமர்சகராகவும் இருந்துள்ளார். பிரபுதேவா பல்வேறு சிறந்த படைப்புகளை கொடுத்திருந்தாலும், அவரது தந்தை முகூர் சுந்தர் அவரை ஒரே ஒரு படத்திற்காக மட்டும் தான் பாராட்டினாராம். 

இதையும் படியுங்கள்... தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா... தியேட்டர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது சுகாதாரத்துறை

35

பிரபுதேவா இயக்கிய முதல் படமான, 'நுவ்வொஸ்டனண்டே நேனோடண்டனா' என்ற தெலுங்குப் படத்திற்காக தான் முகூர் சுந்தர் தனது மகனை மனம்திறந்து பாராட்டினாராம். தந்தையிடம் கிடைத்த இந்த மதிப்புமிக்க பாராட்டை அடுத்து தான் பிரபுதேவா தமிழில் போக்கிரி என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். இதையடுத்து பாலிவுட்டிலும் இவர் இயக்குனராக ஜொலித்தார்.

45

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் பிரபுதேவா. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், பிரபுதேவாவின் தீவிர ரசிகராம், அதன்காரணமாக தான் அவர் இயக்கத்தில் அடுத்தடுத்து நடித்தார். பிரபுதேவா பரத நாட்டியம் நடனம் ஆடுவதில் வல்லவராக இருந்தாலும், காதலன் படத்தில் இடம்பெற்ற முக்காபுலா பாடல் மூலம் தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கி அதன்மூலம் புகழ் பெற்றார்.

பிரபுதேவா கடந்த 1995-ம் ஆண்டு ரம்லத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் பிறந்தன. அதில் ஒரு மகன் மட்டும் கேன்சர் பாதிப்பால் கடந்த 2008-ம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். இதையடுத்து மனைவியை பிரிந்து வாழத்தொடங்கிய பிரபுதேவாவுக்கு நயன்தாரா உடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாகவும் மாறியது.

55

முதல் மனைவியை 2011-ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள தயராகி வந்தார் பிரபுதேவா. ஆனால் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கடந்த 2012-ம் ஆண்டு அவர்கள் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்தனர். நயன்தாராவின் பிரிவு பிரபுதேவாவின் கெரியரில் ஒரு திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. நயன்தாராவை பிரிந்த பின்னர் பாலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராகவும் உயர்ந்தார். கடந்த 2020-ம் ஆண்டு ஹிமானி என்கிற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸ் மட்டுமில்ல.. சோசியல் மீடியாவிலும் நான் ‘கிங்’குடா..! இன்ஸ்டாகிராமில் விஜய் படைத்த உலக சாதனை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரபுதேவா

Latest Videos
Recommended Stories
Recommended image1
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image2
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image3
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved