காதலில் தோல்வி... சினிமாவில் வெற்றி! திருமணம் நின்றுபோன பின் தலைகீழாக மாறிய ராஷ்மிகாவின் வாழ்க்கை
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் காதல் தோல்வியில் முடிந்ததை அடுத்து அவர் சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா ஆறே ஆண்டுகளில் சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டுள்ளார். நடிகை ராஷ்மிகா சினிமாவில் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டியதற்கு பின்னணியில் மிகப்பெரிய வலியும் இருக்கிறது. அதனைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
நடிகை ராஷ்மிகா கிரிக் பார்ட்டி என்கிற கன்னட படத்தின் மூலம் தான் அறிமுகமானார். காந்தாரா படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி தான் அப்படத்தை இயக்கி இருந்தார். அப்படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக ரக்ஷித் ஷெட்டி நடித்திருந்தார். கிரிக் பார்ட்டி படத்தில் நடித்தபோது ராஷ்மிகாவுக்கும் ரக்ஷித் ஷெட்டிக்கும் இடையே காதல் மலர்ந்தது. அப்படம் ரிலீஸ் ஆன பின்னர் இவர்கள் இருவரும் தங்கள் உறவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்தனர்.
அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு ராஷ்மிகாவுக்கும் ரக்ஷித் ஷெட்டிக்கு திருமணம் நிச்சயம் ஆனது. இவர்களது நிச்சயதார்த்த நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது நடிகை ராஷ்மிகாவுக்கு வெறும் 21 வயது தான். ஆனால் ரக்ஷித் ஷெட்டி அவரைவிட 13 வயது மூத்தவராக இருந்தார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் காதலித்து திருமணத்துக்கும் ரெடியாகி வந்தது இந்த ஜோடி. ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு இவர்கள் இருவரும் தங்களது உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.
இதையும் படியுங்கள்... சீதா மகாலட்சுமியா இது... டூபீஸில் டூமச் கிளாமர் காட்டி ரசிகர்களை கவர்ச்சியால் கட்டிப்போட்ட மிருணாள் தாக்கூர்
நிச்சயத்துக்கு பின் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என முடிவெடுத்த இந்த ஜோடி தங்களது காதலையும் முறித்துக்கொண்டது. இந்த காதல் முறிவு தான் ராஷ்மிகாவின் வாழ்க்கை தலைகீழாக மாற்றியது. ரக்ஷித் ஷெட்டி உடனான காதல் முறிவுக்கு பின்னர் தான் ராஷ்மிகாவின் சினிமா கெரியர் ஜெட் வேகத்தில் உயர்ந்து இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகையாக உயர்ந்து இருக்கிறார்.
தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா முன்னணி நடிகையாக உயர்ந்தாலும் அவரைப்பற்றிய காதல் வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. ரக்ஷித் ஷெட்டியுடனான காதல் முறிவுக்கு பின்னர் ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கூறப்பட்டது. பின்னர் தாங்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறி விளக்கம் கொடுத்தார் ராஷ்மிகா. அதன்பின் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லை ராஷ்மிகா காதலிப்பதாக கூறப்பட்டது. இதற்கு கில் மறுப்பு தெரிவித்தார். தற்போது லேட்டஸ்டாக தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் உடன் ராஷ்மிகா ஜோடியாக வந்து விருது விழாக்களில் கலந்துகொண்டதால், அவர்கள் இருவரும் காதலிப்பதாக டோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்... நேஷனல் கிரஷுக்கு பிறந்தநாள்... 26 வயதில் கோடீஸ்வரி ஆன ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா..!