சீதா மகாலட்சுமியா இது... டூபீஸில் டூமச் கிளாமர் காட்டி ரசிகர்களை கவர்ச்சியால் கட்டிப்போட்ட மிருணாள் தாக்கூர்
சீதா ராமம் படத்தில் ஹோம்லி வேடத்தில் நடித்து அசத்திய மிருணாள் தாக்கூர் தற்போது பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்தவர் மிருணாள் தாக்கூர். இவரை பேமஸ் ஆக்கியது தெலுங்கு சினிமா தான். தெலுங்கில் கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் திரைப்படம் வேறலெவல் ஹிட் அடித்தது. இப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மிருணாள் தாக்கூர். குறிப்பாக அவர் நடித்த சீதா மகாலட்சுமி கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது. அந்த அளவுக்கு அழகு பதுமையுடன் நேர்த்தியாக நடித்திருந்தார்.
சீதா ராமம் படத்துக்கு பின் நடிகை மிருணாள் தாக்கூருக்கு பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அண்மையில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்த செல்பி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தார் மிருணாள் தாக்கூர். அதோடு இவர் சூர்யா 42 படத்தில் நடிப்பதாகவும் ஒரு தகவல் பரவியது. அப்படம் மூலம் அவர் கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி என அவரே மறுத்துவிட்டார்.
இதையும் படியுங்கள்...watch : இந்தியாவில் 10 மொழிகளில் ரிலீசாகும் ‘ஸ்பைடர்மேன் : அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்' - மாஸான டிரைலர் இதோ
தற்போது மேலும் ஒரு தெலுங்கு பட வாய்ப்பை கைப்பற்றி உள்ளார் மிருணாள் தாக்கூர். தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்தை செளரியவ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இப்படத்தில் நடிக்க நடிகை மிருணாள் தாக்கூர் ரூ.6 கோடி வரை சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. தற்காலிகமாக நானி 30 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், தற்போது சுற்றுலா சென்றிருக்கும் நடிகை மிருணாள் தாக்கூர், அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கடற்கரையில் பிகினி உடை அணிந்தபடி கவர்ச்சி பொங்க அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். சீதா ராமம் படத்தில் நடித்த சீதா மகாலட்சுமியா இது என ஷாக் ஆகிப்போய் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மிருணாள் தாக்கூரின் பிகினி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... நேஷனல் கிரஷுக்கு பிறந்தநாள்... 26 வயதில் கோடீஸ்வரி ஆன ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா..!