செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா அருமை.. விக்கியை நேரில் பாராட்டிய சூப்பர் ஸ்டார் !
தொடக்க விழா சிறப்பாக இருந்ததாக விக்னேஷ் நேரில் பாராட்டிய ரஜினிகாந்த் நிகழ்ச்சி முடிந்த பிறகு தொலைபேசியில் அழைத்து பாராட்டியதாக விக்னேஷ் சிவன் நெகிகழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.
chess olympiad 2022
முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 44 வது ஒலிம்பியாட் போட்டியான இது ஜூலை 28 அன்று துவங்கியது. சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் கோலகலமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி ஆனது ஒளி மற்றும் இசைக்காட்சியாக இருந்தது.
chess olympiad 2022
மேலும் செய்திகளுக்கு...மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மீது ராட்சத திரை விழுந்து விபத்து - பதைபதைக்க வைக்கும் வீடியோ உள்ளே
187நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். கடந்த 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெற உள்ளது. மாமல்லபுரத்தில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. முதல் சுற்று போட்டிக்கு இந்தியா சார்பில் ஆடவர் ஏபிசி மற்றும் மகளிர் ஏபிசி என மொத்த 6 அணிகள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு...மனைவி இயக்கிய பேப்பர் ராக்கெட் வெப் தொடரை விமர்சனம் செய்த உதயநிதி - என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
ஆடவர் பி அணியில் இடம்பெற்று ஆடிய ரோனக் சத்வானி ஐக்கிய அரபு அமீரக வீரர் அப்துல் ரஹீமை முகமதுவை வீழ்த்தி இருந்தார். அதேபோல ஆடவர் இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், அமீரக வீரர் ஹோசானி ஓம்ரானை வீழ்த்தினார். ஆடவர் சி பிரிவில் இந்திய வீரர்கள் கார்த்திகேயன் முரளி மற்றும் அபிஷித் குப்தா ஆகியோர் இருவரும் தெற்கு சூடான் வீரர்களை வீழ்த்தினார். ஆடவர் பிரிவின் இந்திய ஏ அணி ஜிம்பாபே அணியை வெற்றி பெற்றது.
chess olympiad 2022
இந்திய மகளிர் சி அணியில் இடம்பெற்ற ஆடிய ஈசா கர்வடே மற்றும் பிரத்யுஷா ஆகிய இருவரும் ஹாங்காங் வீராங்கனைகளை வீழ்த்தினார். அதேபோல சேலத்தை சேர்ந்த நந்திதா, ஹாங்காங்கின் டெங் ஜிங் கிறிஸ்டலை வீழ்த்தினார். முதல் நாள் நடந்த முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் அபாரமான வெற்றியை பெற்று பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு... சுட்டதெல்லாம் ‘தங்கம்’... துப்பாக்கி சுடுதல் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை தட்டித்தூக்கிய நடிகர் அஜித்
இந்நிலையில் ஒலிம்பியாட் போட்டி ஆரம்ப விழாவை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. முன்னதாக ஒலிம்பியாட் ஆந்தம் பாடலை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் உருவாக்கியிருந்தார். தொடக்க விழா சிறப்பாக இருந்ததாக விக்னேஷ் நேரில் பாராட்டிய ரஜினிகாந்த் நிகழ்ச்சி முடிந்த பிறகு தொலைபேசியில் அழைத்து பாராட்டியதாக விக்னேஷ் சிவன் நெகிகழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.