மனைவி இயக்கிய பேப்பர் ராக்கெட் வெப் தொடரை விமர்சனம் செய்த உதயநிதி - என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
Paper Rocket web series : கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் பேப்பர் ராக்கெட் வெப் தொடரை பார்த்த உதயநிதி ஸ்டாலினின், அதுகுறித்த விமர்சனத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த 2002-ம் ஆண்டு கிருத்திகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற ஆர்வமுடன் இருந்த கிருத்திகா கடந்த 2013-ம் ஆண்டு சிவா நடிப்பில் வெளிவந்த வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
இதன்பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தை இயக்கி இருந்தார். இந்த இரண்டு படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த கிருத்திகா, கடந்தாண்டு பேப்பர் ராக்கெட் எனும் வெப் தொடரை இயக்க ஒப்பந்தமானார்.
இதையும் படியுங்கள்.... சுட்டதெல்லாம் ‘தங்கம்’... துப்பாக்கி சுடுதல் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை தட்டித்தூக்கிய நடிகர் அஜித்
இந்த வெப் தொடரில் காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடித்துள்ளார். மேலும் தன்யா ரவிச்சந்திரன், கெளரி கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த வெப் தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்து இருந்தார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார். நேற்று இந்த வெப் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீசானது.
இந்நிலையில், கிருத்திகாவின் கணவர் உதயநிதி, இதுகுறித்து தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது : “என்னுடைய டைரக்டர் கிருத்திகா. உனது பேப்பர் ராக்கெட்டிற்கு வாழ்த்துக்கள். இது உன்னுடைய சிறந்த படைப்பு. இதை நீ எழுதியுள்ள விதமும், அதை திரையில் கொண்டுவந்துள்ள விதமும் சூப்பர். பேப்பர் ராக்கெட் குழுவுக்கு வாழ்த்துக்கள். 2-வது சீசனுக்காக காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்.... மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மீது ராட்சத திரை விழுந்து விபத்து - பதைபதைக்க வைக்கும் வீடியோ உள்ளே